இணையத்தில் பயனாளர்களுக்கு தேவையான உரிமைகள் கிடைப்பது உறுதி செய்யும் விதமாகவும், அவர்களின் தகவல்கள் பாதுகாப்பதை உறுதி செய்யும் விதமாகவும் வரும் காலங்களில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சீன தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் செப்டம்பர் மாதம் அறிவிப்பை வெளியிட்டது. சீனாவில் புதிய மொபைல் எண்ணை வாங்க அடையாள அட்டையை அளிக்க வேண்டியது 2013ஆம் ஆண்டே கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த நடவடிக்கையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையிலும், பயனாளர்கள் அளிக்கும் தகவல்களை செயற்கை நுண்ணறிவு மூலம் சரிபார்க்கும் வகையிலும் வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் புதிதாக மொபைல் எண்ணை வாங்குவோர், தங்கள் முகத்தினை அந்தந்த தொலைத் தொடர்பு நிறுவனங்களில் பதிவு செய்யவேண்டிது கட்டாயம் என்று சீனா அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு சீனாவில் வரவேற்பையும் எதிர்ப்பையும் ஒருசேர பெற்றுள்ளது. இதன் மூலம் இணையதளத்தில் தகவல்கள் திருடப்படுவது குறையும் என்று ஒருசாரார் கூறினாலும் இது இணைய கண்காணிப்பை அதிகரிக்கும் வகையிலேயே உள்ளது என்றும் மற்றொரு சாரார் குற்றம்சாட்டிவருகின்றனர்.
'Face Recognition' எனப்படும் முகத்தை வைத்து செயற்கை நுண்ணறிவு மூலம் ஒருவரை அடையாளம் காணும் திட்டத்தை சீன நீண்ட காலமாக செயல்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாசாவுக்கு முன்னரே சந்திரயானைக் கண்டுபிடித்துவிட்டோம் - இஸ்ரோ சிவன் தகவல்