சான் பிரான்சிஸ்கோ: ஆப்பிள் ஐபோன்களுக்கு உள்ளது போலவே, ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்களுக்கும் உலகளவில் தனி இடம் இருக்கிறது. இந்த வாட்ச்சுகளில் ஏராளமான வசதிகளை ஆப்பிள் நிறுவனம் வழங்குகிறது. குட்டி செல்போன் போலவே இந்த வாட்ச் பல்வேறு சேவைகளை வழங்குகிறது.
இந்த நிலையில், ஆப்பிள் வாட்ச் ஓஎஸ் 9.1-ன் ஐந்தாவது பீட்டா பதிப்பை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. டெவலப்பர் டெஸ்டிங்கிற்காக இந்த ஓஎஸ் வெளியிடப்பட்டுள்ளது. ஆப்பிள் டெவலப்பர் சென்டர் வழியாக பீட்டா சோதனை திட்டத்தில் பங்கேற்கும் டெவலப்பர்கள் இதனை பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ச் ஓஎஸ் 9.1-ன் ஐந்தாவது பீட்டாவின் பொது பதிப்பு ஓரிரு வாரங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய பதிப்பில் பக் ஃபிக்சஸ் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், குறிப்பாக இதில் என்னென்ன சிறப்பம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன என்பது தொடர்பாக எந்தவித தகவலும் வெளியாகவில்லை. பொதுவாக பயனர்கள் தங்களது முதன்மை சாதனங்களில் பீட்டா ஓஎஸ்களை இன்ஸ்டால் செய்ய வேண்டாம் என ஆப்பிள் நிறுவனம் அறிவுறுத்துகிறது.
அதற்கு காரணம், இந்த பீட்டா ஓஎஸ்களால் டேட்டா லாஸ் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால், டெவலப்பர்கள், டெஸ்டர்கள் அனைவருமே தங்களது இரண்டாம் நிலை சாதனங்களில் இதனை சோதிக்கலாம், அப்போதும் தரவுகளை பேக் அப் எடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.