டெல்லி: சீன கைப்பேசி தயாரிப்பு நிறுவனமான ரியல்மி, மே 25ஆம் தேதி தனது புதிய முதல் ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் வாட்ச் ரகங்களை இந்திய சந்தைக்கு அறிமுகப்படுத்துகிறது.
ரியல்மி நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்வாட்ச், ரியல்மி ஸ்மார்ட் டிவி மாடல்களின் இந்திய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து ரியல்மியின் இந்திய தலைமைச் செயல் அலுவலர் மாதவ் சேத் தனது ட்விட்டர் பக்கத்தில், புதிய சாதனங்கள் இந்தியாவில் மே 25ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்திருக்கிறார். மேலும், ரியல்மி நிறுவனம் இந்தியாவின் பிரபல வாழ்வியல் சாதனங்களை விற்கும் நிறுவனமாக உருவெடுக்கும் பயணத்தை தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி...
- ரியல்மி டிவி ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டிருக்கும்
- 43 அங்குல அளவில் ஹெச்.டி திரை அமைந்திருக்கும்
- நெட்ஃப்ளிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி ஹாட்ஸ்டார் வசதியை கொண்டிருக்கும்
என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவிற்கு படையெடுக்கும் நிறுவனங்கள்! லாவா ரூ.800 கோடி முதலீடு செய்ய முடிவு!
புதிய ரியல்மி வாட்ச் பொறுத்தவரையில்...
- சதுரங்க வடிவம் கொண்ட தொடுதிரை,
- வளைந்த கார்னர்களை கொண்ட அமைப்பு
- 1.4 அங்குல டிஎஃப்டி எல்சிடி
- 320x320 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கும்
- வலதுபுறத்தில் ஒற்றை பட்டன் வழங்கப்படும்
- ரிஸ்ட் பேண்ட்களை கழற்றி மாற்ற முடியாது
- 160 எம்ஏஹெச் பேட்டரி
- ஐபி68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட்
- ப்ளூடூத் 5 கனெக்டிவிட்டி
-
It's #TimeToBeSmarter.
— realme (@realmemobiles) May 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
'Watch' this space for more. https://t.co/Z54A0Tl9f8
">It's #TimeToBeSmarter.
— realme (@realmemobiles) May 14, 2020
'Watch' this space for more. https://t.co/Z54A0Tl9f8It's #TimeToBeSmarter.
— realme (@realmemobiles) May 14, 2020
'Watch' this space for more. https://t.co/Z54A0Tl9f8
-
ஆகியவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.