ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்பேண்ட் ஆகியவற்றில் சீன நிறுவனமாக ரெட்மியின் ஆதிக்கத்தை உடைக்க ரியல்மி 2018ஆம் ஆண்டு ஓப்போவின் இணை நிறுவனமான ரியல்மி தொடங்கப்பட்டது. பின் ரியல்மி நிறுவனத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ரியல்மி விரைவிலேயே தனி நிறுவனமாகச் செயல்படத் தொடங்கியது.
ஸ்மார்ட்பேண்ட் சந்தையில் எம்ஐ பேண்ட்களுக்குப் போட்டியாகக் கடந்தாண்டு ரியல்மி தனது ஸ்மார்ட் பேண்டை வெளியிட்டது. ரூ.1499-க்கு வெளியான இந்த பேண்டிற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் ரியல்மி நிறுவனம் தனது பேண்டிற்கு புதிய அப்டேட்டை வழங்கியுள்ளது. இந்த அப்டேட் மூலம் பயனாளர்கள் தங்களைச் சுற்றியுள்ள வானிலை குறித்த தகவல்களை ரியல்மி பேண்ட் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
இதற்கு முதலில் ரியல்மி செயலியில் ஜிபிஎஸ் செட்டிங்கை ஆன் செய்ய வேண்டும். இதன்மூலம் நாம் இருக்கும் இடம் குறித்த தகவல்கள் பேண்டில் அப்டேட் செய்யப்படும். பின் பேண்டிலுள்ள பட்டனை ஏழு முறை தொடர்ந்து அழுத்துவதன் மூலம் வானிலை குறித்த தகவல்களை எளிதில் தெரிந்துகொள்ளலாம்.
-
Guys, the latest update for #realmeBand is out with new Weather features & other exciting updates.
— Madhav @home (@MadhavSheth1) April 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Head to #realmeCommunity to know more.https://t.co/V1FcDmLaKG
">Guys, the latest update for #realmeBand is out with new Weather features & other exciting updates.
— Madhav @home (@MadhavSheth1) April 22, 2020
Head to #realmeCommunity to know more.https://t.co/V1FcDmLaKGGuys, the latest update for #realmeBand is out with new Weather features & other exciting updates.
— Madhav @home (@MadhavSheth1) April 22, 2020
Head to #realmeCommunity to know more.https://t.co/V1FcDmLaKG
இது தவிர நமது ஸ்மார்ட்போனைக் கண்டுபிடிக்க உதவும் வசதி, மெசஜை அதிக நேரம் காண்பிக்கும் வசதி ஆகியவை இதில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
அப்டேட் செய்யும் வழி
- முதலில் ரியல்மி பேண்டை ரியல்மி லின்க் செயலியுடன் இணைக்க வேண்டும்
- பின் ரியல்மி லின்க் செயலியைத் திறந்தால் அப்டேட் குறித்த தகவல்கள் காண்பிக்கும்.
- அதைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். வெறும் 10 நிமிடங்களில் முழு அப்டேட் செயல்முறையும் முடிந்துவிடும்
இதையும் படிங்க: நெட்பிளிக்ஸை காலி செய்ய யூடியூப் எடுத்துள்ள அதிரடி முடிவு!