பெய்ஜிங் (சீனா): சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தில் ஜூராங் ரோவர் எடுத்த புகைப்படங்களை சீனா வெளியிட்டுள்ளது.
செவ்வாய் கிரகம் குறித்த ஆராய்ச்சிக்காக சீனா கடந்த ஆண்டு லாங் மார்ச்-5 என்ற ராக்கெட் மூலம் தியான்வென் விண்கலத்தை விண்ணில் செலுத்தியது.
இந்த விண்கலம் மே மாதம் 22ஆம் தேதி செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது. அதிலிருந்த ஜூராங் என்ற ரோவர் தற்போது ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறது.
இச்சூழலில் அந்த ரோவர், தான் தரையிறங்கிய தளம், செவ்வாயிலுள்ள மண் உள்ளிட்ட மூன்று புகைப்படங்களை அனுப்பியுள்ளது.