சான் பிரான்சிஸ்கோ (அமெரிக்கா): டெஸ்லா மாடல் எஸ் பிளைட் மின்சாரக் காரை அந்நிறுவனம் அறிமுகம் செய்தது.
இந்த அறிமுக நிகழ்வு தொடங்கும் முன் மேடையிலேயே புது காரை டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் எலான் மஸ்க் ஓட்டிக் காட்டினார்.
புதிய டெஸ்லா மாடல் எஸ் பிளைட் காரின் தொடக்க விலை 1,29,999 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 95 லட்சம்) ஆகும். இதன் விநியோகம் ஐரோப்பிய சந்தைகளில் ஏற்கெனவே தொடங்கிவிட்டது.
டெஸ்லா மாடல் எஸ் பிளைட் கார், 1020 குதிரைத் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு சுமார் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 2 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 321 கிலோமீட்டர் வேகத்தில் செல்லுமாம்.
சிறப்பான விஷயம் ஒன்றையும் நிறுவனம் இந்த காரில் தனித்துவப் படுத்தியுள்ளது. ஆம், சந்தையில் தற்போது களமிறக்கப்படும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் EQS காருக்கு போட்டியாக, ஒருமுறை சார்ஜ் செய்தால் 627 கிலோமீட்டர் வரை செல்லும் திறனை டெஸ்லா மாடல் எஸ் பிளைட் கொண்டுள்ளது.
என்னதான் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் EQS கார், ஒரு முறை சார்ஜ் செய்தால் 750 கிலோ மீட்டர் வரை செல்லும் என்று கூறப்பட்டாலும், விலை ஒப்பீடு செய்கையில் டெஸ்லா நிறுவனம் சிறப்புமிக்கதாக தனது வாகனங்களை களமிறக்குகிறது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் EQS காரின் விலை இந்திய மதிப்பில் ரூ. 1.75 கோடியாம்.
டெஸ்லா மாடல் எஸ் பிளைட் தோற்றம்