ரெனால்ட் நிறுவனம் தனது வாகனத் தயாரிப்புகளை அனைத்து தர மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் குறைந்த விலை முதல் அதிக விலைவரை சொகுசு வாகனத்தைத் தயாரித்து வாடிக்கையாளர்களை மகிழ்வித்துவருகிறது. இதன் ஒரு உற்பத்தி ஆலை சென்னையில் செயல்பட்டுவருகிறது.
மாருதி நிறுவனத்தின் வாகனங்களான மாருதி சுசுகி 800, மாருதி சுசுகி ஆல்டோ வண்டிகள் எப்படி இந்தியச் சாலையை ஆக்கிரமித்துக் கொண்டதோ, அதே யுக்தியை இக்காலத்திற்கு ஏற்றாற்போல் கையிலெடுத்து நெரிசல்மிகு இந்தியச் சாலைகளின் செல்ல வண்டியாகக் களமிறக்கியதுதான் ரெனால்ட் நிறுவனத்தின் ‘ரெனால்ட் க்விட்’.
![renault kwid facelift teaser revealed upcoming renault car new car upcoming compact cars in india](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4555174_oldmodelkwid.jpg)
பார்ப்பதற்குச் சிறிய அளவிலான கார், அசரடிக்கும் தோற்றம், அனைத்தும் செறிவூட்டப்பட்ட வசதிகள், புதிய தொழில்நுட்பங்கள், நெரிசல்மிகு நகரச் சாலைகளில் செல்ல இலகுவான அமைப்பு என ‘ரெனால்ட் க்விட்’ அனைத்து திசைகளிலும் தனது பங்கை செவ்வனே செய்து, அசைக்கமுடியாத அளவில் தன் சக்கரங்களை இந்தியச் சாலைகளில் பதித்தது.
ரெனால்ட் ட்ரைபர் குறித்து அறிய.... சொடுக்கவும்
இந்த வாகனம் சாலை பயன்பாட்டுக்கு வந்த சமயத்தில், மலைப் பாதைகளில் வாகனம் ஏறும்போது, இதன் உந்துசக்தி திறன் எதிர்பார்த்த அளவில் இல்லை என்ற பேச்சு எழுந்தது. அதனையும் உடனடியாக மேம்படுத்தி ரெனால்ட் நிறுவனம் புதிய ரகங்களைக் களமிறக்கியது. இந்நிலையில் 2019ஆம் ஆண்டிற்கான புதிய ரகத்தை ரெனால்ட் நிறுவனம் வெளியிடும் என்று பயனர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், நேற்று புதிய ‘ரெனால்ட் க்விட் பேஸ்-லிப்ட்’ காரின் டீசரை வெளியிட்டுள்ளது ரெனால்ட் நிறுவனம்.
![renault kwid facelift teaser revealed upcoming renault car new car upcoming compact cars in india](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4555174_kwid.jpg)
வடிவமைப்பில் பல மாற்றங்களைக் கொண்டு வெளிவரவிருக்கும் க்விட் பேஸ்லிப்ட்-இன் டீசரில், சிலதை மட்டும் நம்மால் கணிக்கமுடிந்தது. முன்பக்க குரோம் கிரில் புதிய வடிவம் பெற்றுள்ளது.
-
The roads are ready for a new style icon. Are you?
— Renault India (@RenaultIndia) September 25, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Watch out for the New #RenaultKWID, coming soon. pic.twitter.com/ZHeK0UgIcU
">The roads are ready for a new style icon. Are you?
— Renault India (@RenaultIndia) September 25, 2019
Watch out for the New #RenaultKWID, coming soon. pic.twitter.com/ZHeK0UgIcUThe roads are ready for a new style icon. Are you?
— Renault India (@RenaultIndia) September 25, 2019
Watch out for the New #RenaultKWID, coming soon. pic.twitter.com/ZHeK0UgIcU
அதுபோல முகப்பு விளக்கில் அணையா எல்.இ.டி. பட்டை விளக்கு (Runner LED Lamp) பொருத்தப்பட்டுள்ளது கண்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: