பெங்களூரு, டெல்லியில் நடைப்பெற்ற ஆன்லைன் நிகழ்வு ஒன்றில், கெனான் புகைப்படக் கருவி நிறுவனம் தனது புதிய EOS R5, EOS R6 கேமராக்களை அறிமுகப்படுத்தியது.
3 லட்சத்து 39 ஆயிரத்து 995 ரூபாய்க்கு EOS R5யும், 2 லட்சத்து 15 ஆயிரத்து 995 ரூபாய்க்கு EOS R6 கேமராக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த கேமராக்களை அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து பெறலாம். முன்பதிவு செய்தும் வாங்கிக்கொள்ளலாம்.
உலகின் முதல் 8K மூவி கேமராவாக வலம்வரப்போகும் EOS R5 கேமராவுக்கு AF trackingஉடன் ரெக்கார்ட் செய்துகொள்ளும் வசதியும் அமைந்துள்ளது.
அதிக பட்சமாக 120fps (Frames Per Second) உடன் ரெக்கார்ட் செய்யும் வசதியை இந்த EOS R5 கேமரா பெற்றுள்ளது. ஸ்லோ மோசஷன் வீடியோக்களை பதிவு செய்ய இந்த வசதியை நீங்கள் உபயோகித்துக்கொள்ளலாம்.
இதுவரை வந்த கெனான் கேமராக்களிலேயே EOS R5, EOS R6 கேமராக்கள் இரண்டும் மிகவும் அட்வான்ஸ்டான DIGIC X இமேஜிங் ப்ராசெசரை கொண்டுள்ளன. இதில் உள்ள ஃபுல் ப்ரேம் சென்சார் அனைத்து விதமான இமேஜ்களையும், வீடியோக்களையும் மேம்படுத்திக் காட்டும். இரண்டு கேமராக்களிலும் டிஜிட்டல் லென்ஸ் ஆப்டிமைசர் (digital lens optimizer) தொழில்நுட்பம் உள்ளது.
கெனான் செயலிகள் மூலமாகவும், நேரடியாகவும் செல்போன் உள்ளிட்ட உபகரணங்களுடன் டேட்டா ட்ரான்ஸ்பர் செய்ய இந்த கேமராக்களால் முடியுமா? நிச்சயம் முடியும். இந்த கேமராக்களில் இன் பில்ட்டாக வைஃபை வசதி உள்ளதால் நிச்சயம் டேட்டா பரிமாற்றம் சாத்தியம்தான்.
இரண்டு கேமராக்களுக்கு இரண்டு ஸ்லாட்டுகள் உள்ளன. R5 கேமராவில் CF express, SD கார்டுகளை பொருத்தமுடியும். R6 கேமராவில் உள்ள இரண்டு ஸ்லாட்களிலும் நாம் இரண்டு SD கார்டுகளை பொருத்திக்கொள்ளலாம்.
இதையும் படிங்க...இனி கூகுள் கட்டுப்பாட்டில் வாட்ஸ்அப்!