ETV Bharat / science-and-technology

ஸ்பேஸ்-எக்ஸ் வெற்றி: விண்வெளியில் இருந்து தரைக்கு வரும் இரு வீரர்கள்!

ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் க்ரியூ டிராகன் என்ற விண்வெளி ஓடத்தில் சென்ற இருவரும் தற்போது பூமிக்கு திரும்பி வருகின்றனர். சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து உள்ளுர் நேரப்படி நேற்று (ஆகஸ்ட் 1) மாலை 5.30 மணியளவில் இரண்டு வீரர்களும் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் விண்வெளி ஓடத்தில் புறப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

author img

By

Published : Aug 2, 2020, 7:38 PM IST

Updated : Feb 16, 2021, 7:52 PM IST

ஸ்பேஸ்-எக்ஸ்
ஸ்பேஸ்-எக்ஸ்

வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்ற நாசா விண்வெளி வீரர்கள் இருவர் அங்கிருந்து பூமிக்கு திரும்பியுள்ளனர்.

ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் க்ரியூ டிராகன் என்ற விண்வெளி ஓடத்தில் சென்ற இருவரும் தற்போது பூமிக்கு திரும்பி வருகின்றனர். சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து உள்ளுர் நேரப்படி நேற்று மாலை 5.30 மணியளவில் இரண்டு வீரர்களும் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் விண்வெளி ஓடத்தில் புறப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனை கடும் சரிவு!

மெக்சிகோ வளைகுடா மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 7 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் வீரர்கள் இருவரும் தரையிறங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக விண்வெளி ஓடத்தின் பயணம் தடைபடாமல் இருக்க நாசா மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவன விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கு பின்னர் இரண்டு வீரர்களை விண்வெளிக்கு அனுப்பி மீண்டும் பூமிக்கு அழைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஸ்பேஸ்-எக்ஸ்
ஸ்பேஸ்-எக்ஸ்

முன்னதாக, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விண்வெளி ஓடத்தில், முதல் முறையாக விண்வெளிக்கு பயணித்த மனிதர்கள், வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்துள்ளனர்.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் ராக்கெட் பயன்பாட்டிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்ட ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு, முதல் முறையாக அமெரிக்க மண்ணிலிருந்து அந்த நாட்டை சேர்ந்த வீரர்கள் விண்வெளிக்கு கிளம்பினர்.

கோவிட்-19: உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட செயற்கை சுவாசக் கருவிகள் ஏற்றுமதி!

டக் ஹர்லி, பாப் பெஹன்கென் ஆகியோர் முதல் முறையாக காப்சூல் வடிவில் வடிவமைக்கப்பட்ட விண்கலத்தில் பயணித்தது மட்டுமின்றி, அவர்கள் நாசாவுக்கான புதிய வணிக மாதிரியையும் தொடங்கி வைத்துள்ளனர்.

ஸ்பேஸ்-எக்ஸ்
ஸ்பேஸ்-எக்ஸ்

கசிவு, அழுத்தம் மற்றும் வெப்பநிலை சோதனைகளுக்கு பிறகு, இந்த விண்வெளி ஓடம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது. அதில் பயணித்த டக் ஹர்லி, பாப் பெஹன்கென் ஆகியோரை சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏற்கனவே இருந்த ரஷ்ய மற்றும் அமெரிக்க குழுவினர் வரவேற்றனர்.

அமெரிக்காவில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து கிளம்பிய பால்கன்-9 ஏவூர்தி, 19 மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்துள்ளது. இந்த வெற்றியின் மூலம், பில்லியனரான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தை போன்று பல்வேறு தனியார் விண்வெளி நிறுவனங்களின் பங்களிப்பு விண்வெளித் துறையில் அதிகரிக்கும் என்று நாசா நம்பிக்கை தெரிவிக்கிறது.

ஸ்பேஸ்-எக்ஸ்

இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியின் மூலம், நாசா தனது விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்புவதற்கு ரஷ்யாவை சார்ந்திருப்பதை முடிவுக்கு கொண்டுவரும் என்று கருதப்படுகிறது.

Last Updated : Feb 16, 2021, 7:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.