டென்மார்க்கைச் சேர்ந்த ஜாப்ரா, ஜி.என். நெட்காமின் துணை நிறுவனமாகும். இந்நிறுவனம் காதணி இசைக் கருவிகள் தயாரிப்பதில் மேம்பட்ட நிறுவனமாகும். மேலும், பயனாளர்களின் நன்மதிப்பை பெற்ற ஜாப்ரா, தற்போது புதிய உயர் தொழிற்நுட்பம் கொண்ட எவால்வ்2 பதிப்புகளை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.
எவால்வ்2 85, எவால்வ்2 65, எவால்வ்2 40 ஆகிய மூன்று ரகங்கள் சந்தையை ஆக்கிரமித்துள்ளன. இதன் தொடக்க விலை 15ஆயிரத்து 831 ரூபாய் என்று நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் முதல் தங்களின் பிரத்யேக கடைகளில் பயனாளிகள் இதனை வாங்கிக் கொள்ளலாம் என்று ஜாப்ரா அறிவித்துள்ளது.
தொலைக்காட்சி மட்டுமல்ல; இனி இதையும் தருவோம்! - சாம்சங் நிறுவனத்தின் புதிய முயற்சி
சிறப்பம்சங்கள்
- எவால்வ்2 85, எவால்வ்2 65 ஆகியன கறுப்பு, பழுப்பு ஆகிய இரு நிறங்களில் கிடைக்கும்
- எவால்வ்2 40 கறுப்பு நிறத்தில் மட்டுமே வெளிவரும்
- எவால்வ்2 85 டிஜிட்டல் ஹைப்ரிட் ஏ.என்.சி தொழிற்நுட்பத்துடன் 10 ஒலி வாங்கிகள் (MICROPHONES) இருக்கும். அதில் 8 காது பகுதியிலும், 2 வாய்க்கு நேராகவும் அமைந்திருக்கும். மேலும், 37 மணிநேரம் மின்கலத் திறன் கொண்டத
- எவால்வ்2 65, மூன்று ஒலிவாங்கிகளைக் கொண்டுள்ளது. எவால்வ்2 85 போல 37 மணிநேரம் மின்கலத் திறன் கொண்டது
- எவால்வ்2 40, அனைத்து பயனாளர்களுக்கும் பொருந்தக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.