புதுடெல்லி: ஸ்பெக்ட்ரம் ஏலம் மூலம் இந்த ஆண்டு 2022 இறுதிக்குள் 5ஜி சேவை நாடு முழுவதும் தொடங்கப்படும் என்று மத்திய அரசு (மார்ச் 25) இன்று மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது, கேள்வி ஒன்றிற்குப் பதிலளித்த மத்திய தகவல் தொடர்புத் துறை இணை அமைச்சர் தேவுசின் சவுகான், விசாரணைக்காக நான்கு நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்கியுள்ளது என்றார். இதன் மூலம் இந்தியாவில் விரைவில் 5ஜி சேவைகள் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தொலைத்தொடர்பு பொதுத்துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களை புத்துயிர் பெற மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அரசுக்குச் சொந்தமான கார்ப்பரேஷனின் 4ஜி சேவைகள் தொடங்கப்படுவதால் பிஎஸ்என்எல் சேவையின் தரமும் மேம்படும் என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: 577 மீனவர்கள் பாகிஸ்தானின் பிடியில் இருப்பதாக மக்களவையில் தகவல்!