திருவள்ளூர்: கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகத் திருவள்ளூர் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது, இங்கு திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் தனது சொத்துக்களைப் பதிவு செய்தல் திருமண பதிவு உள்ளிட்ட பல்வேறு ஆவண பதிவுகளைத் திருவள்ளூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருவள்ளூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு லஞ்ச குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சமீபத்தில் சார்பதிவாளர் ஒருவர் போலி ஆவணங்கள் தயார் செய்து பத்திரப்பதிவுக்கு உடந்தையாக இருந்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு குற்றவாளி மீது நடவடிக்கை எடுத்து நீக்கம் செய்யப்பட்டார்.
தற்பொழுது சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிந்த பிரகாஷ் என்பவருக்குக் கூடுதல் பொறுப்பாக இணைப்பதிவாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டு தற்பொழுது சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுகள் நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து இணைப்பதிவாளர் பொறுப்பேற்றுள்ள பிரகாஷ் மீதும் லஞ்ச குற்றச்சாட்டுத் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் ஓய்வு பெற்ற பணியாளர் மணி என்பவர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம் பெறும் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
எனவே கூடுதல் பொறுப்பு வகிக்கும் பிரகாஷை பதவி நீக்கம் செய்து சார் பதிவாளர் அலுவலகத்தில் புதிதாக சார் பதிவாளர் நியமனம் செய்ய வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க:பிரபல ரவுடி ரெட் தினேஷ் கொலை - 5 பேர் கைது; பின்னணி என்ன?