ETV Bharat / opinion

கரோனாவால் பாலியல் கல்வியில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள்!

author img

By

Published : Dec 25, 2020, 4:39 PM IST

கோவிட்-19 காரணமாக பாலியல் கல்வியை விரிவானதாக மாற்றுவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது.

பாலியல் கல்வி
பாலியல் கல்வி

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் மிகப்பெரிய சமூக மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன், ஏற்றுக்கொள்ளும் திறன், சமூக மேம்பாடு தாராளமயமாக்கல் மற்றும் கடின மனப்பான்மை ஆகியவை அதிகரித்து வருகின்ற போதிலும், பாலியல் கல்வியைப் பொறுத்தவரை இன்னும் நிறைய முன்னேற வேண்டியிருக்கிறது.

ஓரளவு கிடைத்த பாலியல் கல்வி, கோவிட்-19 தொற்றுநோயால் பள்ளிகள் மூடப்பட்டு மேலும் பாதிப்படைந்துள்ளது. ஆசிரியர்-மாணவர்களுக்கு இடையிலான வகுப்பறை தொடர்பு கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டுவிட்டது. மேலும் மாணவர்கள் தங்கள் வீடுகளிலேயே இருப்பதாலும் பாடங்களை திரைகளில் பார்ப்பதாலும் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இப்போது இளைஞர்களுக்கு அவர்களுடைய நண்பர்கள், வகுப்பு தோழர்கள் மற்றும் புதிதாக எதையும் புரிந்துகொள்ளும் ஆர்வம் போன்றவைகளுக்கு உடல் ரீதியான தொடர்பு தற்போது இல்லாதது மிகவும் கடினமாக உள்ளது. மேலும், மாணவர்கள் ஆன்லைனில் அதிக நேரம் செலவிடுவதால், இணைய அச்சுறுத்தல் மற்றும் ஆன்லைன் துன்புறுத்தல் போன்றவை அதிகரித்து. பாலியல் கல்விக்கு சரியான வழிகாட்டுதல் இல்லாமல் இன்னும் மோசமாகிவிடும் அபாயம் உள்ளது.

ஹைப்பர் இன்டர்நெட் இணைப்பு மற்றும் தொற்றுநோய் பரவல் காரணமாக வீட்டில் இருந்து கற்பதனால், அணுகுமுறை மற்றும் கல்விமுறை இரண்டிலும் மாற்றம் இருக்க வேண்டும். நடைமுறையில் உள்ள சூழலில் இருந்து விலகாமல் பாலியல் கல்வியை உண்மையிலேயே உள்ளடக்கியதாகவும், முற்போக்கானதாகவும், பாலின-சமநிலையாகவும் இருக்க வழக்கமான அணுகுமுறையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.

பாலியல் கல்வி குறைவின் காரணமாக நாட்டின் பெரும்பகுதிகளில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் உடல் பாகங்களை தொடுதல் என்றால் என்ன என்பது குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது. சம்மதம், மீறல் மற்றும் வன்புணர்வு ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசம் புரியாமல் இந்த நிகழ்வுகளை மறைப்பதால் குற்றவாளிகளை மேலும் தைரியப்படுத்துகிறது. யுனிசெப் மற்றும் பிரயாஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மேற்கொண்ட இந்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆய்வு, 53% குழந்தைகள் 5 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை அளித்துள்ளது . பெரும்பாலான வழக்குகளில், குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்களாக இருந்தனர், மேலும் இந்த வழக்குகளில் பெரும்பாலானவை பதிவு செய்யப்படாமல் உள்ளன.

ஒரு பரந்த கண்ணோட்டம் தேவை

பெரும்பாலும், இந்தியாவில் பாலியல் கல்வி என்பது பதின்ம வயது கர்ப்பம் மற்றும் எச்.ஐ.வி / எய்ட்ஸ் ஆகியவற்றுக்கு ஒத்ததாகக் கருதப்படுகிறது. மாதவிடாய் கூட சம்பிரதாயமாக மட்டுமே பேசப்படுகிறது. இதைப் பற்றி மிகவும் விரிவான புரிதல் மற்றும் பாலின அடையாளம், நோக்குநிலை மற்றும் பன்முகத்தன்மை ஆகியவற்றின்படி அதைப் பெறுவதற்கான தேவை உள்ளது.

மற்றொரு பிரச்சினை என்னவென்றால், ஒருமித்த கருத்தை மீறி, ஒரு பாடமாக அது கட்டாயமாக இருந்தபோதிலும், அவர்களின் பாடத்திட்டத்தில் எந்தவிதமான பாலியல் கல்வியும் இல்லாத பள்ளிகள் மற்றும் பிற கல்விநிறுவனங்கள் இன்னும் நிறைய உள்ளன. ‘பாலியல் மற்றும் இனப்பெருக்க உரிமைகளுக்கான இளைஞர் கூட்டணி’ அறிக்கையின்படி, பெரும்பாலான பள்ளிகள், தனியார் மற்றும் அரசின் மாநில கல்வி வாரியங்கள் தங்கள் பாடத்திட்டத்தில் எந்தவிதமான பாலியல் கல்வியையும் கொண்டிருக்கவில்லை.

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (NACO) மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (யுனிசெஃப்) ஆகியவற்றுடன் இணைந்து இந்திய அரசு 2007 இல் ‘பதின்ம பருவ கல்வித் திட்டத்தை’ (AEP) துவக்கியது. அதே ஆண்டு இது அனைத்து மாநிலங்களிலும் அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. 'துல்லியமான, வயதுக்கு ஏற்ற மற்றும் கலாச்சார ரீதியாக பொருத்தமான தகவல்களை அளித்து இளைஞர்களை மேம்படுத்துதல், ஆரோக்கியமான மனப்பான்மைகளை மேம்படுத்தி வாழ்க்கை சூழ்நிலைகளுக்கு நேர்மறையான வழிகளில் நடக்க அவர்கள் திறன்களை வளர்ப்பது போன்ற முயற்சிகளை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முக்கியமானதாகக் கருதினாலும், அதனை செயல்படுத்த முடியவில்லை. அதன் உள்ளடக்கத்தை 'பொருத்தமற்றது' என்று கூறி 12க்கும் மேற்பட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து பின்னர் தடை செய்யப்பட்டது.

சமூக மற்றும் கலாச்சார உணர்வுகள் மாற்றமடைந்த போதிலும், 'செக்ஸ்' மற்றும் 'பாலியல்' போன்ற சொற்கள் தடைசெய்யப்பட்டவையாக உள்ளன. இதை பற்றிய நேர்மையான, நியாயமான, ஆரோக்கியமான மற்றும் வெளிப்படையாக பேசுவது என்பது இல்லாத காரணத்தால், அது குறித்த சங்கடம் மற்றும் மறுப்பு ஆகியவை தொடர்கிறது.

விரிவான அணுகுமுறை

உடல் ஆரோக்கியம் மற்றும் 'பாலின உணர்திறன்' ஆகியவற்றின் அவசியத்தைக் குறிப்பிடும் தேசிய சுகாதார கொள்கை 2020, பதின்ம பருவ பாலியல் கல்வியை கருத்தில் கொள்ளவில்லை .

முறையான கல்விக்கான அணுகல் இல்லாத காரணத்தால், குறிப்பாக மிகவும் பாதிக்கப்படக்கூடிய இளம் பருவத்தினரால் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் விரிவான பாலியல் கல்வியை வழங்குவதற்கு ஒரு தொகுப்பை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. முழுமையான, சுய-மேம்பாட்டுக்கான வாய்ப்புகளை வழங்கக்கூடிய, கற்றலுடன் செயல்பாடுகளை உள்ளடக்கிய ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும். இளம் பருவத்தினரை வழிநடத்துவதற்கும் அவர்களில் சிலரை பாலியல் கல்வி பயிற்சியாளர்களாக மாற்றுவதற்கும் அவர்களுக்கு உதவுவதற்காக பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோரது பங்களிப்போடு வடிவமைக்கப்பட வேண்டும். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் / சிபிஓக்கள் போன்றவற்றை இந்த நோக்கத்திற்காக ஒன்றிணைக்கலாம்.

தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, டிஜிட்டல் மீடியா மற்றும் இணைய அடிப்படையிலான பயன்பாடு மூலமாக பாலியல் கல்வியை எளிதாக்குவதற்கும் ஆராயலாம். இணையம் மற்றும் டிஜிட்டல் மீடியா போன்றவை பாலியல் மற்றும் உறவுகள் பற்றிய முக்கியமான கேள்விகளுக்கு தனிப்பட்ட மற்றும் எளிதில் அணுகக்கூடிய பதில்களை அளிக்க முடியும். இந்த ஊடகங்கள் பாலியல் கல்வியாளர்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள், வலைத்தளங்கள், செய்தி பயன்பாடுகள் மற்றும் சமூக ஊடக தளங்கள் வழியாக இளைஞர்களை நேரடியாக சென்றடைய ஒரு வாய்ப்பையும் வழங்க முடியும்.

குறிப்புகள்

  • பதின்ம பருவ கல்வி குறித்த கொள்கைகள் மற்றும் திட்டங்கள் ’, ஷோத்கங்கா
  • ஜென் கில்பர்ட் எழுதிய ‘பள்ளியில் பாலியல்: கல்வியின் வரம்புகள்’
  • ‘இந்தியாவில் பதின்ம பருவ பாலியல் கல்வி: தற்போதைய கண்ணோட்டத்தில்- NCBI- NIH (2015)’
  • பத்திரிகை தகவல் துறை இந்திய அரசு சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்
  • இந்தியாவில் பாலியல் கல்வி ஏன் முக்கியமானது? - ஆர்த்ரே விஜி
  • இந்திய அரசு தேசிய கல்வி கொள்கை 2019-20
  • பாலியல் அல்லது பாலியல் கல்வி ஏன் இந்தியாவில் இன்னும் தடைசெய்யப்பட்டுள்ளது - ஜோயோதி சவுத்ரி

இதையும் படிங்க: மக்களுக்காக வெளியிடப்பட்ட சந்திரயான்-2 திட்டத் தொகுப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.