ETV Bharat / opinion

சிந்து நதி நீர் ஒப்பந்தம் - ஆணையர் பி.கே.சக்சேனாவுடன் சிறப்பு நேர்காணல்

இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது என, ஈடிவி பாரத் நடத்திய நேர்காணலில் சிந்து நதிநீர் ஆணையர் பி.கே.சக்சேனா தெரிவித்துள்ளார்.

Resolution likely to be reached on Indus Waters Treaty
சிந்து நதி நீர் ஒப்பந்தம்!
author img

By

Published : Mar 16, 2021, 10:36 AM IST

சிந்து நதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் நீரைப் பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து, பாகிஸ்தான்-இந்தியா இடையேயான பேச்சுவார்த்தை மார்ச் மாத இறுதியில் டெல்லியில் நடக்க உள்ளது.

அதற்கு முன்னதாக, சிந்து நதிநீர் ஒப்பந்தம், அதன் தொடர்புடைய தாக்கங்கள், அதிலிருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பன குறித்து இந்தியாவின் சிந்து நதிநீர் ஆணையர் பி.கே.சக்சேனாவுடன் ஈடிவி பாரத் நேர்காணல் நடத்தியது.

  • சுருக்கமாக சிந்து நதி நீர் ஒப்பந்தம்?

1960ஆம் ஆண்டு, செப்டம்பர் 19ஆம் தேதியன்று இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் சிந்து நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் விதிகளின் கீழ், கிழக்கு நதிகளான சட்லெஜ், பியாஸ், ரவி ஆகிய அனைத்து நதிகளின் நீர், சராசரியாக ஆண்டுக்கு 33 மில்லியன் ஏக்கர் அடி (MAF) இந்தியாவின் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

மேற்குப் பகுதியில் பாயும் சிந்து, ஜீலம், செனாப் நதிகளின் பெரும் பகுதியை, பாகிஸ்தான் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒப்பந்தப்படி, உள்நாட்டு மற்றும் நுகர்வு அல்லாதவை தவிர இந்த நீர்நிலைகளில் எந்தவொரு குறுக்கீடும் அனுமதிக்கப்படவில்லை. வடிவமைப்பு, செயல்பாடு ஆகியவற்றுக்கான குறிப்பிட்ட அளவுகோல்களுக்கு உள்பட்டு மேற்கு நதிகளில் நீர் மின்சாரத்தை உருவாக்குவதற்கான கட்டுப்பாடற்ற உரிமையும் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

  • செனாப் ஆற்றில் இந்திய நீர் மின் திட்டங்கள் குறித்து பாகிஸ்தான் கவலை எழுப்பி வருகிறதே? இது குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

ஒப்பந்தத்தின்கீழ் இந்தியாவின் உரிமைகளை முழுமையாகப் பயன்படுத்துவதில் இந்தியா உறுதி பூண்டுள்ளது. அதற்காக அது செயல்பட்டு வருகிறது. பேச்சுவார்த்தை மூலம் சிக்கல்களுக்கு இணக்கமான தீர்வை பெறுவோம் என நாங்கள் நம்புகிறோம். கூட்டத்தின்போது, ​​செனாப் ஆற்றில் இந்திய நீர் மின் திட்டங்களை தொடங்குவதில் பாகிஸ்தானின் ஆட்சேபனைகள் விவாதிக்கப்படலாம். தொடர்ச்சியான பேச்சுவார்த்தை மூலம், இந்தப் பிரச்னைகள் குறித்து ஒரு தீர்மானம் எட்டப்படும் என்று நம்பலாம்.

  • இந்தோ-பாக்., உறவுகளுக்கு சிந்து நீர் ஒப்பந்தம் எவ்வளவு ஏற்றது?

இந்த ஒப்பந்தம், சிந்துவின் நீரைப் பயன்படுத்துவது, நன்கு வரையறுக்கப்பட்ட நடைமுறையின் மூலம் பிரச்னையைத் தீர்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்வது தொடர்பான உரிமைகள், பொறுப்புகள் ஆகியவற்றை வரையறுத்துள்ளது.

  • இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே அதிகரித்துவரும் பதட்டங்களின் பின்னணியில் வரவிருக்கும் சந்திப்பு எவ்வளவு முக்கியமானதாக இருக்கும்?

ஒப்பந்தத்தின் விதிகளின்கீழ், ஆணையர்கள் இருவரும் இந்தியா, பாகிஸ்தானில் மாறி மாறி ஆண்டுக்கு ஒரு முறையாவது சந்திப்பது கட்டாயமாகும். முன்னதாக 2020ஆம் ஆண்டு, மார்ச் மாதம், டெல்லியில் திட்டமிடப்பட்டிருந்த கடந்த ஆண்டு கூட்டம், தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, பரஸ்பர ஒப்புதலுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் முதன்முறையாக ரத்து செய்யப்பட்டது. நிலைமை மேம்பட்டுள்ளதால், இந்தக் கட்டாயக் கூட்டம் அனைத்து கரோனா நெறிமுறைகளுடனும் நடத்தப்படுகிறது.

  • 370ஆவது பிரிவின் கீழ் சிறப்பு விதிகள் ரத்து செய்யப்பட்ட பின்னர் இது முதல் கூட்டமாக இருப்பதால் புதியதாக என்ன எதிர்பார்க்கலாம்? சிந்து நீர் ஒப்பந்தத்தில் இந்தியாவின் பங்கு என்னவாக இருக்கும்?

வருடாந்திர கூட்டம் கட்டாயமானது. கூட்டத்திற்கான திட்டங்கள் கூட்டத்திற்கு முன்னர் இரு ஆணையாளர்களால் தீர்மானிக்கப்படும். இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது.

  • இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீர் மோதல், ஒத்துழைப்பு ஆகியவற்றின் தாக்கம் என்னவாக இருக்கும்?

முதலில் ஆணையர்கள், பின்னர் அரசு, அதன் பின்னர் மூன்றாம் தரப்பினர் என தகராறைத் தீர்க்க ஒப்பந்தத்தின் பிரிவு IX பல நிலை வழிமுறையை வழங்குகிறது.

நிரந்தர சிந்து ஆணையத்தின் ஆண்டுக் கூட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் சிந்து ஆணையர்கள் இருப்பார்கள். ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370ஆவது பிரிவின்கீழ் சிறப்பு விதிகள் ரத்து செய்யப்பட்ட பின்னர் இரு ஆணையர்களுக்கிடையேயான முதல் சந்திப்பாகவும் இது இருக்கும். இந்த மாநிலம் பின்னர் லடாக், ஜம்மு-காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது.

லடாக்கில் பல நீர் மின் திட்டங்களை இந்தியா அனுமதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் டர்புக் ஷியோக் (19 மெகாவாட்), ஷங்கர் (18.5 மெகாவாட்), நிமு சில்லிங் (24 மெகாவாட்), ரோண்டோ (12 மெகாவாட்), ரத்தன் நாக் (10.5 மெகாவாட்) போன்றவை லேவுக்கும், மங்டம் சாங்ரா (19 மெகாவாட்), கார்கில் ஹண்டர்மேன் (25 மெகாவாட் ), தமாஷா (12 மெகாவாட்) கார்கிலுக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

  • ஐ.டபிள்யூ.டி ஏன் அவசியம் என்பதற்கான சுருக்கமான பின்னணி என்ன?

பிரிவினைக்குப் பிறகு, பிரிக்கப்பட்ட நீர் மீதான உரிமைகள், பொறுப்புகள் அவசியமானவை. நீர்வளத் துறை, நதி அபிவிருத்தி, கங்கை புனரமைப்பு, ஜல் சக்தி அமைச்சகம் ஆகியவற்றின் கூற்றுப்படி, சுதந்திரத்தின்போது ​​புதிதாக உருவாக்கப்பட்ட இரண்டு சுதந்திர நாடுகளான பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எல்லைக் கோடு, சிந்துப் படுகையின் குறுக்கே அமைக்கப்பட்டது.

மேலும், இரண்டு முக்கியமான நீர்ப்பாசனத் திட்டங்களில் ஒன்று ரவி ஆற்றின் மாதோபூரிலும், மற்றொன்று சட்லெஜ் ஆற்றின் ஃபெரோஸ்பூரிலும், பஞ்சாபில் (பாகிஸ்தான்) நீர்ப்பாசன கால்வாய் திட்டம் உள்ளிட்டவை முற்றிலும் இந்தியப் பகுதியிலும் விடப்பட்டன. புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான சர்வதேச வங்கியின் (உலக வங்கி) கீழ் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் 1960ஆம் ஆண்டில் சிந்து நீர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின் முடிவுக்கு வந்தது.

இந்த ஒப்பந்தம் அப்போதைய பாகிஸ்தான் அதிபரான பீல்ட் மார்ஷல் முகமது அயூப் கான், அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு, உலக வங்கியின் WAB இல்லீஃப் ஆகியோரிடையே செப்டம்பர் 19, 1960 அன்று கராச்சியில் கையெழுத்தானது . இந்த ஒப்பந்தம் 1960 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.

வரவிருக்கும் கூட்டம் இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நடக்கும் 116ஆவது கூட்டமாகும். 1960ஆம் ஆண்டில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதிலிருந்து, இந்தியாவும் பாகிஸ்தானும் 115 கூட்டங்களை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.