ETV Bharat / opinion

காங்கிரஸ் வெற்றிக்காக அஸ்ஸாம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களைக் கவரும் ராகுல், பிரியங்கா - ராகுல் காந்தி

பாஜக-ஏஜிபி அரசாங்கம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வாக்குகளை தக்க வைப்பதற்காக மேற்கொண்ட இலவச அரிசி மற்றும் சர்க்கரை, சமையல் எரிவாயு மற்றும் நிதியுதவி, ஊக்கத்தொகை போன்ற நலத்திட்ட நடவடிக்கைகள் தோல்வியில் முடிவடைந்தது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
author img

By

Published : Mar 21, 2021, 4:03 PM IST

அஸ்ஸாம் மாநிலத்தின் மக்கள்தொகையில் 17 விழுக்காடாக உள்ள தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் ஆதரவைத் திரும்பப் பெற காங்கிரஸ் கடுமையாக முயற்சிக்கிறது. மேலும் மொத்தமுள்ள 126 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 40 இடங்களில் அவர்களின் வாக்கு வெற்றி/தோல்வியை நிர்ணயிக்கிறது.

வீடுகள், கல்வி மற்றும் சுகாதார வசதிகள் இல்லாததால் பின்தங்கிய நிலையில் உள்ள அச்சமூகத்தினர் பாரம்பரியமாக காங்கிரஸை ஆதரித்து வந்தனர். ஆனால், 2016 சட்டப்பேரவைத்தேர்தலில் தேயிலை தோட்டத்தொழிலாளர்கள் பாஜகவை ஆதரித்தனர். ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் தொழிலாளர்களுக்கு நிறைய திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என பாஜக வாக்குறுதி அளித்தது. ஆனால், உண்மையில் எதுவும் நடக்கவில்லை.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, பாஜக மீது அச்சமூகம் அதிருப்தி அடைந்துள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சரும், ஐந்து முறை திப்ருகார் நாடாளுமன்ற உறுப்பினருமான பாபன் சிங் கட்டோவர் குறிப்பிடுகிறார்.

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் பல ஆண்டுகளாக பணியாற்றிய பாபன் சிங் கட்டோவர் இதுகுறித்து கூறுகையில், "1952 முதல் இச்சமூகம் காங்கிரஸை ஆதரித்து வருகிறது. ஆனால், அவர்களில் 60 விழுக்காடு பேர் 2016ஆம் ஆண்டு பாஜகவுக்கு வாக்களித்தனர். ஆனால் இப்போது அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பி வருகிறார்கள்" என்று கூறினார்.

பாஜக-ஏஜிபி(அசோம் கண பரிஷத்) அரசாங்கம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாக்குகளை தக்க வைப்பதற்காக மேற்கொண்ட இலவச அரிசி, சர்க்கரை, சமையல் எரிவாயு மற்றும் நிதியுதவி, ஊக்கத்தொகை போன்ற நலத்திட்ட நடவடிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. ஒரு தொகுதியில் ஒட்டுமொத்தமாக வாக்களிக்கும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் சமூகத்தின் அரசியல் முக்கியத்துவத்தை உணர்ந்த காங்கிரஸ் மத்திய தலைமை, அச்சமூகத்தின் வாக்குகளை மீண்டும் பெறுவதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, பிப்ரவரி 14 அன்று சிவசாகரில் நடந்த ஒரு பேரணியில் கட்சியின் தேர்தல் பரப்புரையைத் தொடங்கிய முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ. 365 ஊதியம் பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.

கட்சியின் மூத்தத் தலைவர் பிரியங்கா காந்தி வதேரா தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களைச் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, அந்த சமூகத்தை புறக்கணித்ததற்காக ஆளும் கூட்டணியைக் குற்றம் சாட்டினார். ஆரம்பத்தில் தங்கள் வங்கிக் கணக்குகளில் கொஞ்சம் பணம் பெற்று சமையல் எரிவாயுவைப் பெற்றிருந்தாலும், வெற்று சிலிண்டர்கள் இப்போது அவர்கள் சமையலறைகளில் கிடக்கின்றன. பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வு சமூகத்தை மோசமாக பாதித்துள்ளன என்று பல பெண் தொழிலாளர்களை மேற்கோள்காட்டி பிரியங்கா கூறினார்.

உண்மையில், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதியமாக ஒரு நாளைக்கு ரூ. 365 வழங்கப்படும் என்பது அஸ்ஸாம் வாக்காளர்களுக்கு காங்கிரஸ் வழங்கும் ஐந்து உத்தரவாதங்களில் ஒன்றாகும். அப்போது பிரியங்கா காந்தி ஒரு தோட்டத்தில் பெண் தொழிலாளர்களுடன் பாரம்பரிய தேயிலைப் பறிக்கும் கருவி கொண்டு தேயிலை இலைகளைப் பறித்தார்.

ராகுல் காந்தி தனது அடுத்த வருகையின் போது, அந்த சமூக மக்களுடன் உணவைப் பகிர்ந்து, அவர்களை மேம்படுத்துவதில் தனது கட்சியின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

ஒரு நாளைக்கு ரூ. 365 என்ற காங்கிரஸின் வாக்குறுதியானது, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பழைய கோரிக்கையாக இருந்தாலும், அது ஒருபோதும் போதுமான அளவில் கவனிக்கப்படவில்லை.

பாஜக-ஏஜிபி கூட்டணி, 2018ஆம் ஆண்டு அவர்களின் ஒரு நாள் ஊதியத்தை 137 ரூபாயிலிருந்து 167 ரூபாயாகவும், கடந்த மாதம் 217 ரூபாயாகவும் உயர்த்தியது. ஆனால், தொழிலாளர்கள் திருப்தி அடையவில்லை.

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் மோசமான நிலைமைக்கு பாஜக தான் காரணம் என ராகுல் மற்றும் பிரியங்கா இருவரும் குற்றம் சாட்டியதால், கடந்த ஆண்டுகளில் சமூகத்திற்கு வழங்கப்பட்ட ஊதியத்தை சுட்டிக்காட்ட பாஜகவை கட்டாயப்படுத்தினர்.

கடந்த மாதம் அஸ்ஸாம் மாநிலத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வளர்ச்சியை அஸ்ஸாமின் வளர்ச்சியுடன் இணைத்து, இந்திய தேயிலைக்கு அவப்பெயர் ஏற்படுத்த சர்வதேச சதித்திட்டம் இருப்பதாக குற்றம் சாட்டினார்.

மத்திய வரவு - செலவுத் திட்டத்தில் தேயிலைத் துறைக்கு ரூ.1000 கோடி ஒதுக்கியுள்ளதாகவும், வடகிழக்கு மாநிலத்தில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நடமாடும் மருத்துவ வாகனங்கள் தவிர ரூ. 3,000 உதவி வழங்கப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மக்களவை சபாநாயகருக்கு கரோனா உறுதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.