டெல்லி: கிழக்கு லடாக்கின் கடினமான மற்றும் தாவரங்கள் இல்லாத குளிர்ந்த பாலைவனங்கள் பலருக்கு தடைசெய்யப்பட்டதாக தோன்றலாம். ஆனால் உலக அரசியலில் மிக முக்கிய பங்காற்றும் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், இந்திய மற்றும் சீன ராணுவ கட்டமைப்பும் அணிதிரட்டலும், மோதல் குறைந்து வருவதற்கான அறிகுறிகளாக தென்படவில்லை. இரு நாடுகளும் அந்தந்த நிலைப்பாடுகளுடன் தீவிரமாக செயல்படுவதால், மோதல்கள் உண்மையில் எதிர்காலத்தில் இன்னும் தீவிரமடையக்கூடும்.
இந்தியாவும் சீனாவும் மோதல்போக்கில் உள்ள நிலையில், தொடர்ந்து கடுமையான குளிர் காலத்தை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. எல்லைப்பகுதியில் இன்னும் இரண்டு மாதங்களில் இது தொடரும்.
இதனால், இந்திய ராணுவத்திற்காக, ராணுவ உபகரணங்கள் தவிர, அதிகப்படியான குளிர் பகுதியில் உபயோகிக்கும் வகையிலான உபகரணங்கள் வாங்கப்படுகின்றன.
ஆயுதங்கள், வெடிபொருள்கள் மற்றும் சென்சார்களும் அந்தப் பட்டியலில் உள்ளன. இதுகுறித்து விவரங்களை நன்கு அறிந்த ராணுவ அலுவலர் ஒருவர் ஈடிவி பாரத்திடம் கூறுகையில், “இந்திய ராணுவ துணைத் தலைவரின் கண்காணிப்பின் கீழ் ராணுவத்திற்கான அவசர கொள்முதல் அதிகரித்துள்ளது. நாங்கள் அதிகமான ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் சென்சார்களை வாங்குகிறோம்.
கடந்த காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் 12 முதல் 15 ஒப்பந்தங்கள் போடப்படும். இந்தமுறை சீனாவுடனான எல்லை பிரச்னைக்கு பிறகு சுமார் 100 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. அவை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும்” என்றார்.
மற்றொரு ஆதாரத்தின்படி, பாதுகாப்பு செயலாளர் ஓரிரு நாள்களில் ரஷ்யாவுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்ய ராணுவத்தின் 'ராணுவம் -2020' மிகப்பெரிய கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக அவர் செல்கிறார். அங்கு வணிக ஒப்பந்தங்களுக்காக ராணுவ பொருள்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன. ஏ.கே 203 தாக்குதல் துப்பாக்கிகள் கூட்டு உற்பத்திக்கான நீண்டகால ஒப்பந்தம் உள்ளிட்ட பல ராணுவ உபகரணங்கள் மேலும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
உயர்தர ராணுவ உபகரணங்களுக்கான தேவை மிகவும் அவசரமாகிவிட்டது. குறிப்பாக எதிர்கால போர்கள் அனைத்தும் ‘தீவிரமானவை’ மற்றும் ‘குறுகியவையாக இருக்கலாம்.
மனநிலை
நடந்துகொண்டிருக்கும் மோதலை மிகவும் வித்தியாசமாகவும், இந்த நேரத்தில் அதிகரிக்கக்கூடிய கொடிய ஆற்றலுடனும் இரு நாடுகளின் தலைமையின் நிலவும் மனப்பான்மைதான், அதன் போராளிகள் பின்பற்ற வேண்டிய கட்டளை.
இந்த நேரத்தில், ஆசிய ஜாம்பவான்கள் இருவரும் மிகவும் வலுவான தேசியவாத சித்தாந்தத்தின் ஆதிக்கத்திற்கு சாட்சியாக உள்ளனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவருக்கும் தேசியவாதம் ஒரு முக்கிய கருத்தியல் திட்டமாக உள்ளது என்பதில் சந்தேகமில்லை.
உலகளாவிய சக்தியாக இந்தியா மாற துடிக்கிறது. ஆனால் சீனாவின் லட்சிய முயற்சியானது, 2049 ஆம் ஆண்டளவில் அமெரிக்காவின் தற்போதைய சவாலை முறியடிக்க வேண்டும். ஆனால் அமெரிக்கா, உலகின் மிக சக்திவாய்ந்த நாடு என்ற தனது நிலையை கைவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. ஆகவே, வருங்காலத்தில் மோதலும் அதன் முடிவும் உலக அரசியலின் எதிர்கால போக்கை தீர்மானிக்கலாம். இதற்கிடையில் நவம்பர் மாதம் அமெரிக்காவில் தேர்தல் நடைபெறுகிறது. இந்த வாய்ப்பை ட்ரம்ப் பயன்படுத்த தவறமாட்டார்.
வழிமுறைகளின் தோல்வி
இந்தியாவும் சீனாவும் விரோதங்களை தவிர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டன. அதற்காக உயர் மட்ட அளவில் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர முயற்சிகளில் ஈடுபட்டன. ஆனால் இந்த நடவடிக்கைகள் யாவும் பயனளிக்கவில்லை. அவைகள் தோல்வியுற்றதற்கு பல்வேறு விதமாக முட்டுக்கட்டைகள் உள்ளன.
கோவிட் சர்வதேச பரவல்
இந்தியாவும் சீனாவும் கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் பலவீனங்களை வெளிப்படுத்தியுள்ள நிலையில், நியூயார்க் அதிக எண்ணிக்கையிலான இறப்புகளுடன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், இந்தியா-சீனா மோதலானது தொற்றுநோயை கையாளுதலில் இருந்து பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்பவும், முக்கிய ஆதரவு தளத்தை பலப்படுத்தவும் உதவும். இந்தியாவைப் பொறுத்தவரை, சீனாவின் மூன்றில் ஒரு பங்கில் மொத்த உள்நாட்டு உற்பத்தியும், ஏற்கனவே பின்தங்கிய நிலையிலும் உள்ளது. இதனால், இந்தியாவை பயன்படுத்த சீனா நினைக்கிறது. ஆகவே அது பின்வாங்குகிறது. ஆனால் இந்தியாவுடன் கூட்டணியில் இருக்கும் அமெரிக்கா சீனாவை முறைக்க தூண்டுகிறது.
குவாட் (Quad) தாக்கங்கள்
இந்தியா-அமெரிக்கா-ஜப்பான்-ஆஸ்திரேலியா ‘குவாட்’ உருவாக்கம் சீனாவுக்கு எதிராக பார்க்கப்படுகிறது. இதனால் சீனா பல்வேறு விதமாக பாதிக்கப்படுகிறது. வருங்காலத்தில் சீனா பல்வேறு நெருக்கடிகளை கொடுக்க முயற்சிக்கும்.
இந்தியாவின் கண்ணோட்டத்தில், சீனா பின்வாங்குவதற்கான ஒரே காரணம் இதுதான். இந்த நேரத்தில் இரு நாடுகளும் தீவிரமான மோதலுக்கு தயாராகிவருகின்றன என்பது மட்டும் தெளிவாகிறது.
இதையும் படிங்க: சீனா ஊடுருவல்; லடாக், காஷ்மீரில் ஏற்பட்ட தாக்கம் என்ன? சிறப்பு கட்டுரை