ETV Bharat / opinion

சீனா, பாகிஸ்தான் பங்கேற்கும் 'காவ்காஸ் 20' போர் ஒத்திகை பயிற்சியில் இருந்து விலகிய இந்தியா! - காவ்காஸ் 20

டெல்லி : சீனா, பாகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகள் பங்கேற்கும் 'காவ்காஸ் 20' போர் ஒத்திகை பயிற்சியிலிருந்து விலகுவதாக இந்தியா அறிவித்துள்ளது. இந்தியாவின் இந்த முடிவு குவாட் அமைப்பை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இது குறித்து மூத்த செய்தியாளர் சஞ்சிப் கே.ஆர்.பருவா ஈடிவி பாரத்திற்கு எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்.

Kavkaz 20
Kavkaz 20
author img

By

Published : Aug 31, 2020, 12:59 PM IST

இந்தியா - சீனா ராணுவங்களுக்கிடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்னைகள் விரைவில் சரியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டு வரும் நிலையில், அந்நம்பிக்கையில் மற்றொரு பின்னடைவாக ரஷ்யா சார்பில் நடத்தப்படும் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பங்கேற்கும் 'காவ்காஸ் 20' போர் ஒத்திகைப் பயிற்சியிலிருந்து விலகுவதாக இந்தியா தற்போது அறிவித்துள்ளது. தெற்கு ரஷ்யாவின் அஸ்ட்ராகான் மாகாணத்தில் வரும் செப்டம்பர் 15 முதல் 27ஆம் தேதி வரை இந்தப் போர் ஒத்திகைப் பயிற்சி நடைபெற உள்ளது.

இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத ராணுவ உயர் அலுவலர் ஒருவர் ஈடிவி பாரத்திடம் கூறுகையில், "ரஷ்யாவில் நடைபெறும் 'காவ்காஸ் 20' போர் ஒத்திகைப் பயிற்சிக்கு இந்தியா தனது படைகளை அனுப்பாது. சீனாவின் பங்கேற்பு, கரோனா பரவல் ஆகிய இரண்டையும் கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

இந்தியாவின் இந்த முடிவு, ஆசியாவின் இரு பெரும் நாடுகளுக்கிடையே மத்தியஸ்தம் செய்ய முயலும் ரஷ்யாவுக்கு பெரிய தடையாக இருக்கும். இந்தக் கூட்டு போர் பயிற்சி ஒத்திகை மூலம் ரஷ்யா தனது அரசியல் திறனை உலகிற்கு காட்டியிருக்கும். குறிப்பாக மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் அமெரிக்கா ஏற்கனவே தோல்வியடைந்துள்ள நிலையில், இந்தியா போர் ஒத்திகைப் பயிற்சியில் பங்கேற்றிருந்தால் அது ரஷ்யாவின் அந்தஸ்தை உலக அரங்கில் பெரிய அளவு உயர்த்தியிருக்கும்.

இருநாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று தெரிவித்திருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அறிவிப்பை இரு நாடுகளும் சிறிது காலத்திற்கு முன்னர்தான் நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சீனாவுக்கு எதிராக குவாட் என்ற அமைப்பை அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், 'காவ்காஸ் 20'இல் இந்தியா பங்கேற்றிருந்தால் அது குவாட் அமைப்பை கட்டமைப்பதில் சிக்கலை ஏற்படுத்திருக்கும்.

மறுபுறம் இந்தியாவின் இந்த முடிவுக்கு குவாட் அமைப்பு நாடுகளிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இன்னும் சில மாதங்களில் இந்திய கடற்படை சார்பில் மலபார் போர் பயிற்சி ஒத்திகை நடைபெறவுள்ளது. இதில் ஏற்கனவே, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மலபார் போர் பயிற்சி ஒத்திகையில் பங்கேற்க ஆஸ்திரேலியாவுக்கும் விரைவில் இந்தியா அழைப்பு விடுக்கும் என்று எதிர்பார்கப்படுகிறது.

இந்தியாவும் சீனாவும் நவீன போர் உபகரணங்கள், போர் விமானங்களைத் தவிர சுமார் ஒரு லட்சம் வீரர்களையும் எல்லைப் பகுதியில் குவித்துள்ளது. இரு நாடுகளுக்குமிடையே அமைதியை நிலைநாட்ட உதவும் என்று எதிர்பார்க்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளன. தற்போதுவரை இரு நாடுகளுக்குமிடையே சிக்கலான உறவு நிலவிவரும் சூழலில், ராணுவ உயர் அலுவலர்கள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை இன்னும் சில நாள்களில் நடைபெறவுள்ளது.

முன்னதாக டோக்ரா ரெஜிமென்ட்டில் இருந்து முப்படைகளைச் சேர்ந்த 180 இந்திய வீரர்கள், 'காவ்காஸ் 20' போர் பயிற்சி ஒத்திகையில் பங்கேற்க ரஷ்யா செல்லத் தயாராகவே இருந்தனர்.

இருப்பினும், 'காவ்காஸ் 20' ஒத்திகையில் சுமார் 13,000 வீரர்கள் மட்டுமே பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு, ரஷ்யா நடத்திய 'சென்டர் - 2019' போர் பயிற்சி ஒத்திகையில் சுமார் 1,28,000 வீரர்கள், 20,000 ராணுவ உபகரணங்கள், 600 விமானங்கள், 15 கப்பல்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை என்று நான்கு முக்கியப் பயிற்சிகளை நடத்துகிறது. அதன்படி சுழற்சி அடிப்படையில், வோஸ்டாக் (கிழக்கு), ஜாபாட் (மேற்கு), சென்டர் (மத்திய), காவ்காஸ் (தெற்கு) என்று ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பயிற்சி நடத்தப்படுகிறது. எனவே காவ்காஸ் பயிற்சி கடைசியாக 2012 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் நடைபெற்றது.

இதையும் படிங்க: ஷின்ஷோ அபே காலத்தில் இந்திய - ஜப்பான் உறவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.