ETV Bharat / opinion

'காங்கிரசுக்கு காந்தி தலைமையேற்க வேண்டும்'- மணிசங்கர் அய்யர்!

author img

By

Published : Sep 4, 2020, 10:01 AM IST

டெல்லி: காங்கிரசுக்கு காந்தி குடும்பம் தலைமையேற்க வேண்டும் என்று கூறிய காங்கிரஸ் மூத்தத் தலைவர் மணிசங்கர் அய்யர், பாஜகவை எதிர்க்க ஒருமித்த நண்பர்களை கண்டறிந்து ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் கூறினார்.

Exclusive interview Gandhi should lead Congress Mani Shankar Aiyar Sonia Gandhi Jitendra Prasada Lok Sabha Priyanka Gandhi Vadra Rahul Gandhi Congress Amit Agnihotri காங்கிரசுக்கு காந்தி தலைமை மணி சங்கர் அய்யர் காங்கிரஸ் ஜித்தேந்திர பிரசாத் சோனியா காந்தி மக்களவை தேர்தல் ராகுல் காந்தி பிரியங்கா காந்தி வத்ரா பாபர் மசூதி மித் அக்னிஹோத்தாரி

காங்கிரஸ் மூத்தத் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மணி சங்கர் அய்யர், அமித் அக்னிஹோத்தாரிக்கு அளித்த பிரத்யேக பேட்டி வருமாறு:-

கேள்வி: சீனியர், ஜூனியர் போட்டி, தலைமை பிரச்னை காங்கிரஸில் தலைதூக்கியுள்ளதாக தெரிகிறதே? காங்கிரஸில் உண்மையான பிரச்னை என்ன?

பதில்: ஆமாம். ஆனால் தலைமை குறித்து பிரச்னை இல்லை. அது தற்செயலானது. மூத்தத் தலைவர்கள் 23 பேரும் காங்கிரஸின் தலைமையை மாற்ற கோரவில்லை. மாறாக கட்சியில் உள்ள அடிப்படை பிரச்னைகளை களைய கூறினார்கள்.

இருப்பினும் தலைமைதான் அடிப்படை பிரச்னை என்று அவர்கள் கருதினால் அகில இந்திய காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடட்டும். சோனியா காந்தியை (9400 வாக்குகள்) எதிர்த்து போட்டியிட்ட ஜித்தேந்திர பிரசாத்தின் (94) நிலைமை அவர்களுக்கு வராது என நம்புகிறேன்.

எனினும் உண்மையான பிரச்னை வேறு இடத்தில் உள்ளது. சுதந்திரத்திற்கு பின்னர் 20 ஆண்டுகள் கழித்து காங்கிரஸில் பிளவு ஏற்பட்டது. 1990 மண்டல் விவகாரத்தில் சில பிற்படுத்தப்பட்ட குழுவினர் தனிபிரிவாக செயல்பட்டனர். 1992 பாபர் மசூதி வீழ்ச்சிக்கு பின்னரும் ஒரு குழப்பம் ஏற்பட்டது. பெரும்பாலான முஸ்லிம்கள் காங்கிரஸிலிருந்து வெளியேறினர்.

ஆகவே தலைமைதான் பிரச்னை என்று பார்க்க வேண்டாம். நான் மேற்கூறிய சமூகக் குழுக்கள் மீண்டும் காங்கிரஸிற்கு திரும்ப வேண்டும். அதேபோல் காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்ற சிறிய சிறிய கட்சிகளையும் மீண்டும் காங்கிரஸில் இணைக்க வேண்டும்.

கேள்வி: ஆனாலும் ஒருங்கிணைப்பு ஏன் தேவைப்படுகிறது? காங்கிரஸ் என்ற ஒரு குடைக்குள் பிராந்திய கட்சிகள் ஏன் இணைய வேண்டும்?

பதில்: பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க ஒருங்கிணைப்புதான் சாத்தியமான வழி. ஆகவே பிராந்திய கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும் என நான் கூறுகின்றேன்.

மேலும் எங்களின் தலைமையின் கீழ் வாருங்கள் என்று கூறினால் அவர்கள் வர வாய்ப்பில்லை. ஆகவே அவர்களுக்கு பொதுவான ஒரு புரிதலை ஏற்படுத்த வேண்டும். அதற்காக நாம் நிறைய விட்டுக்கொடுக்க வேண்டும்.

பிரதமர் யார் என்பது குறித்து போராட வேண்டிய நேரம் இதுவல்ல. 2024இல் பாஜகவை தோற்கடிக்க கேரள பாணி அரசியலை பின்பற்ற வேண்டும்.

கேள்வி: தொடர்ச்சியான இரண்டு மக்களவை தேர்தல்களிலும் காங்கிரஸால் 10 விழுக்காடு (54) இடங்களை கூட பெற முடியாமல் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்: நிச்சயமாக இது ஒரு பெரிய சவால். நாங்கள் இதுபோன்ற பெரிய பெரிய பின்னடைவுகளை சந்தித்துள்ளோம். எனது சொந்த மாநிலமான தமிழ்நாட்டில் 1967ஆம் ஆண்டுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சிக்கு வரவில்லை. இன்னும் 600 ஆண்டுகள் ஆனாலும் அங்கு இதே நிலைதான்.

மேலும், எந்தக் கிராமமும் காங்கிரசுக்கு திரும்ப விரும்பவில்லை. ஆகவே திமுக, அதிமுகவுடன் மாறி மாறி கூட்டணி வைத்து வருகிறோம். 1991ஆம் ஆண்டில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 39 தொகுதிகளை வென்றோம். நானும் நாடாளுமன்றம் சென்றேன். பொதுவாக நாடாளுமன்ற தேர்தலில் சுதந்திரமான நிலை உள்ளது. ஆகவே நம்மிடமிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் திரும்பும்போது அவர்களை அங்கீகரித்து நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கேள்வி: அது ஒரு நீண்ட கால தீர்வு; தற்போது காங்கிரசுக்கு தலைவரை தேர்ந்தெடுப்பது அவசியமா?

பதில்: தற்போதுள்ள நிலையில் தலைமை இவ்வாறு இருப்பதே சிறந்தது. நாங்கள் ஒரு பிரச்னையில் கவனம் செலுத்தும் போது, மற்றொரு பிரச்னை இங்கிருந்து வெளியேறுகிறது.

மாற்று தலைவரை கண்டறிவதற்கு ராகுல் காந்தி பல்வேறு வாய்ப்புகளை வழங்கினார். தனது ராஜினாமாவுக்கு பிறகு இரண்டு மாதங்கள் காத்திருந்தார். தனது தாயோ (சோனியா காந்தி), சகோதரியோ (பிரியங்கா காந்தி) தலைமைக்கு வர மாட்டார்கள் எனக் கூறினார். ஆனாலும் காங்கிரஸிற்கு தலைமையேற்க மற்ற தலைவர்கள் முன்வரவில்லை.

மேலும், பாஜகவின் நோக்கம், “காங்கிரஸ் இல்லாத இந்தியா, காந்தி இல்லாத காங்கிரஸ்” ஆகும். எனவே இதில் நாம் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என நினைக்கிறேன்.

கேள்வி: சரி., காங்கிரஸில் காந்திகளை தவிர்க்க முடியாது என்று சொல்கிறீர்கள். கட்சியை எவ்வாறு பலப்படுத்த போகிறீர்கள்?

பதில்: மூன்று காந்திகளில் (சோனியா, ராகுல், பிரியங்கா) தலைமையில் இருக்க வேண்டும் என்பதில் என் மனதில் எந்த சந்தேகமும் இல்லை. அது ராகுல் காந்தியாக கூட இருக்கலாம்.

ஆனாலும் விருப்பமில்லாத ஒருவரை தலைமைப் பொறுப்பேற்க நாம் எவ்வாறு தள்ள முடியும். எனினும், சோனியா காந்தியின் மனம், உடல் நிலையை கருத்தில் கொண்டு அவர் மனம் மாறலாம். காங்கிரஸ் ஒரு கட்சியாக, நமது எதிரியான பாஜகவை வலிமையாக எதிர்க்க உறுதியான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.

நாம் இழந்த சமூக குழுக்களை மீண்டும் கொண்டுவருவதற்கு உறுதியான கூட்டணிகளை உருவாக்க வேண்டும். நாம் ஒரு காந்தியின் கீழ் ஒன்றுபட்டு அடுத்த நான்கு ஆண்டுகளில் போராடி, ஒரு சிறந்த முடிவை உருவாக்க முடியுமா என்று பார்க்க வேண்டும்.

தற்போது மக்களவையில் 52 இடங்களுக்கு வந்துள்ளோம். இதற்கு கட்சி பலவீனமாக இருப்பது காரணம் அல்ல. பாஜகவின் வாக்கு சதவீதம் 63 விழுக்காடு ஆக உள்ளது.

ஆகவே நாம் ஒன்றுபடும் போது நாமும் அவ்வாறு நிலைக்கு வரலாம். இத்தகைய நிலையை கடுமையான தலைமையின் கீழ் காங்கிரஸ் ஒன்றுபடும்போது பெற முடியும் என்று நம்புகிறேன்.

காந்திகள் ஐந்து தலைமுறைகளாக காங்கிரஸை வழிநடத்தியுள்ளனர். கட்சிக்குள் ஒருமித்த கருத்து இல்லை என்றால், இதுவரை கட்சியின் உயர் பதவியை வகிக்காத ஒரு புதியவரை முயற்சிக்க வேண்டிய நேரம் இது.

கேள்வி- அப்படியென்றால் பிரியங்கா காந்தியை தலைவராக்குவது உங்கள் விருப்பமா?

பதில்: இல்லை. எனது விருப்பம் காந்திதான். அது அவரது குடும்பத்தில் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

கேள்வி: 2019 முதல் காந்தி அல்லாத குடும்பத்தை சேர்ந்தவர் தலைவராக வர வேண்டும் என்று பேச்சுகள் உள்ளதே? அது ஒரு நல்ல தேர்வாக இருக்குமா?

பதில்: எனது இளைமைக் காலத்தில் பிரபல இந்தி நடிகை மதுபாலா என்னுடையவராக மாற வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை.

காந்தி அல்லாத ஒருவர் காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக வேண்டும் என்பது என்னுடைய பழைய விருப்பத்துக்கு ஒத்ததாகும். காந்தியை சுற்றி அரசியல் நகர்வுகள் இருக்கும்வரை காந்தி அல்லாதோரால் காந்தி ஆக முடியாது.

கேள்வி: உள்கட்சி தேர்தல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: மறைந்த பிரதமர் ராஜிவ் காந்தி 1990களிலும், ராகுல் காந்தி 2007களிலும் இதனை கூறினார்கள். இளைஞர் காங்கிரஸ், தேசிய மாணவர்கள் சங்கம் ஆகியவற்றிலும் ராகுல் காந்தி இதனை முயற்சித்தார்.

சில சர்ச்சைகள் இருந்தன. அதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். ஏனெனில் இவையெல்லாம் புதுமையான திட்டங்கள். மேலும், 23 மூத்தத் தலைவர்கள் முன்வைத்த சில கோரிக்கைகளை கட்சி ஏற்றுக்கொள்ளும். அல்லது அனைத்தையும் ஏற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அமித் அக்னிஹோத்தாரிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான மணிசங்கர் அய்யர் கூறினார்.

இதையும் படிங்க: நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் - காங்கிரஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.