ETV Bharat / opinion

கோவிட் -19 தொற்றுக்கு எதிராக ஒருங்கிணைந்த போராட்டம் தேவை

author img

By

Published : May 13, 2021, 7:36 AM IST

கங்கை நதியில் மிதக்கும் சடலங்கள், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பிரபலமான மருத்துவமனைகளில் இறக்கும் நோயாளிகள் போன்ற கொடூரமான காட்சிகள் அனைத்தும் நாட்டில் கோவிட் -19 நடத்திவரும் கோரத்தாண்டவத்தை நமக்குக் கூறுகின்றன.

Coordinated fight needed against Covid
கோவிட்டுக்கு எதிராக ஒருங்கிணைந்த போராட்டம் தேவை

நாடு தழுவிய ஊரடங்கு உடனடியாக அறிவிக்கப்பட்டு, தடுப்பூசி போடுவதை மிகப்பெரிய அளவில் மேற்கொண்டால் மட்டுமே இந்தியா இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க முடியும் என்று அமெரிக்க மருத்துவ நிபுணர் அந்தோனி ஃபவுசி கூறியுள்ளார். ஒவ்வொரு மாநிலமும் ஊரடங்கு உத்தரவு போன்ற தடைகளை விதித்து அதனை பின்பற்றி வரும் போதும் இந்த தொற்று நோய் கட்டுக்குள் வர மறுக்கிறது. தடுப்பூசி கிடைப்பது குறித்து எந்த தெளிவான அறிகுறியும் இல்லை என்பதால், 18 முதல் 45 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதாக மத்திய அரசு அறிவித்திருந்த 'தடுப்பூசி திட்டம்' கைநழுவி போய்விட்டது.

தற்போதைய வேகத்தில், நாடு முழுவதும் தடுப்பூசி போட மூன்று ஆண்டுகள் ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. காலப்போக்கில் வைரஸ் ஆபத்தான பிறழ்வுகளுக்கு உட்பட்டு, தடுப்பூசிக்கு எதிராக செயல்படலாம் என்ற திகிலூட்டும் மதிப்பீடுகள் வெளிப்படுத்துகின்றன. விசித்திரமானவராக அறியப்பட்ட போதிலும், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் உற்பத்திக்காக 2000 கோடி அமெரிக்க டாலர்களை ஒதுக்கியிருந்தார். அந்த ஒரே செயலின் காரணமாக அமெரிக்கா இன்று ஒரு உறுதியான சூழ்நிலையில் உள்ளது.

அதனுடன் ஒப்பிடுகையில், கோவிட் -19 தடுப்பூசிக்கு ரூ.35,000 கோடி ஒதுக்கீடு செய்வதாக இந்திய அரசு அறிவித்தது, ஆனால் உண்மையில் அந்த தொகையில் 14 விழுக்காடு மட்டுமே செலவிடப்பட்டது. கூட்டாட்சி தத்துவம் என்ற பெயரில், இப்போது தடுப்பூசி வாங்குவதற்கான செலவில் 50 விழுக்காட்டை மாநிலங்களை ஏற்க சொல்லியுள்ளது மத்திய அரசு. இவற்றின் விளைவாக, நாட்டின் மக்கள் தொகையில் 3 விழுக்காடு பேருக்கு மட்டுமே தடுப்பூசி போட முடிகிறது. உலகில் பெரும்பான்மையான நாடுகள் அனைவருக்கும் இலவச தடுப்பூசி அளித்துக் கொண்டிருக்கும் போது, ​​ ஒரு டோஸுக்கு ரூ.700 முதல் ரூ.1500 வரை விலை உள்ள தனியார் தடுப்பூசிகளை இந்திய அரசு நாடுகிறது. இதுபோன்ற பொருத்தமற்ற தடுப்பூசி கொள்கையை பின்பற்றும் அதே வேளையில், இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டிற்கு எந்த அதிகாரமும் இல்லை என்று மத்திய அரசு கூறுவது நியாயமற்றது.

அவசரகால மருந்துகளின் உற்பத்தியை அதிகரிக்க உதவும் காப்புரிமைச் சட்டத்தின் 92, 100 அல்லது 102 பிரிவுகளை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்குமாறு ஏப்ரல் 30 அன்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், 'டிரிப்ஸ் ஒப்பந்தம்' மற்றும் 'தோஹா அறிக்கை' ஆகியவற்றின் காப்புரிமைச் சட்டத்தை மீறுவதாக அமையும் என்றும் எனவே இந்த பிரச்சினை ராஜதந்திர முறைகள் மூலம் தீர்க்கப்பட்டு வருகிறது என்றும் உச்ச நீதிமன்றத்தில், தனது சமீபத்திய அறிக்கையில் மத்திய அரசு கூறியுள்ளது. முரண்பாடாக, இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் கடந்த ஆண்டு அக்டோபரில் காப்புரிமைகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வாதிட்டன.

ஆனால், இது போன்ற விதிகள் இருந்தாலும், ​​தவிர்க்க முடியாத அவசரகால சூழ்நிலைகளில் விதிவிலக்காக அதைப் பயன்படுத்த முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

தொற்று நோய் காரணமாக இறப்புகள் அதிகரிப்பதால், அமெரிக்காவும் காப்புரிமை விலக்குக்கான முன்மொழிவுடன் ஒத்துப்போகிறது. எனினும், இந்த நெருக்கடியை சமாளிக்க காப்புரிமை விலக்கு மட்டும் போதாது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உற்பத்தி, மிகப்பெரிய தேவையை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு கட்டத்தை எட்ட வேண்டுமானால், தொழில்நுட்ப பரிமாற்றம், முக்கியமான இயந்திரங்கள் கிடைக்கும் தன்மை, மூலப்பொருள் மற்றும் மனித வளங்கள் போன்ற பல சிக்கல்களைச் சமாளிக்க வேண்டியிருக்கும். உண்மை என்னவென்றால், அறிவுசார் சொத்துரிமை விலக்கு அளிக்கப்பட்டாலும், mRNA தொழில்நுட்பத்தை பின்பற்றாமல் இந்தியா மோடர்னா மற்றும் ஃபைசர் தடுப்பூசிகளை தயாரிக்க முடியாது.

பெரும்பான்மையான மக்களுக்கு தடுப்பூசி கிடைக்க உதவும் உத்திகளை மத்திய அரசு பின்பற்ற வேண்டும். அதனுடன், இந்தியா போன்ற நாடுகளின் நலனுக்காக முன்னேறிய நாடுகள் தாராளமாக தங்களது தடுப்பூசி மருந்துகளை அளிக்க முன்வர வேண்டும் என்பதே காலத்தின் தேவை. மாநிலங்களின் கருத்துக்களுக்கு இடமளிக்கும் வகையில் மத்திய அரசு அதன் பிடிவாதத்தை தளர்த்தும் போது தான் நாடு இந்த நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து வெளியேற முடியும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.