ETV Bharat / opinion

ஏன் சபாஹர் ரயில்வே திட்டத்தை இந்தியா கைவிட்டது?

சபஹார் ரயில்வே திட்டத்தின் முக்கியத்துவம் குறித்தும் 2016ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் தெஹ்ரான் பயணத்தின்போது, இந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே கையெழுத்தான முத்தரப்பு ஒப்பந்தம் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் சஞ்சய் கபூர் நமது ஈடிவி பாரத்திற்கு எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்...

Chabahar
Chabahar
author img

By

Published : Jul 25, 2020, 4:16 PM IST

அமெரிக்காவுக்குப் பயந்து, இந்தியாவுடான உறவைவிட்டு வெளியேற ஈரான் தீர்மானித்திருக்கிறது. சபாஹர் துறைமுகம் முதல் ஜாஹீதான் இடையேயான முக்கியமான ரயில் பாதையைத் தனியே கட்டமைக்க தீர்மானித்திருக்கிறது. இது ஒரே நாள் இரவில் ஏற்பட்ட மாற்றம் அல்ல; இது மெல்ல மெல்ல ஏற்பட்ட மாற்றமாகும்.

பிரதமர் நரேந்திர மோடி 2016ஆம் ஆண்டு தெஹ்ரானுக்குச் சென்றபோது ஆப்கானிஸ்தான், ஈரான், இந்தியா ஆகிய நாடுகளை இணைக்கும் முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தத்துக்கு உயிர் கொடுக்கும் வகையில் ரயில் பாதை அமைப்பதற்கு சாத்தியம் உள்ளதா என்பது குறித்து சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பதற்கு இர்கான் (IRCON) என்ற இந்திய ரயில்வே நிறுவனம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. ஈரானின் தென்கிழக்கில் உள்ள சபாஹர் துறைமுகம் ஓமன் கடலில் அமைந்துள்ளது. இந்த முத்தரப்பு இணைப்பின் மையமாக இது இருக்கிறது.

இந்தியா ரயில்வே பாதை அமைக்கும் வகையில் இந்தியாவுடன் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்று தெஹ்ரான் சொன்னபோது, அது தவறாகப் பார்க்கப்படவில்லை. இந்தியா தமது விருப்பத்தைத் தெரிவித்தது. ஆனால், உண்மையில் ரயில் பாதை அமைப்பது உள்ளிட்டவற்றைக் கட்டமைக்கும் பணியை அது மேற்கொள்ளவில்லை. இந்திய ரயில்வே நிறுவனமான இர்கான் சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் அது தொடர்பான 150 மில்லியன் பண மதிப்புள்ள சில பணிகளை மட்டுமே மேற்கொண்டது.

சபாஹர் துறைமுகம் வெற்றிகரமாகச் செயல்பட வேண்டும் என்ற முக்கியத்துவம் வாய்ந்த பட்டியலில் இடம்பெற்றிருந்தபோதிலும், ஏன் இந்தியா போதுமான பணத்தை இந்த ரயில்வே பாதைக்கு ஒதுக்கவில்லை? இந்தியா எனும் பெரிய தேசம், விவேகமான சுயாட்சியைப் பயன்படுத்தவில்லை, தேசிய நலனுக்கு உதவுவதையும் முன்னெடுக்கவில்லை.

பதிலாக இந்தியா அமெரிக்காவிடம் தம்மைத் தாமே தாழ்த்திக் கொண்டுவிட்டது என்ற கோட்பாடுகள் மற்றும் காரணங்கள் உள்ளிட்டவற்றைச் சொல்லி ஈரான் இந்தியாவை குற்றஞ்சாட்டியது. சபாஹர் திட்டம் என்ற போதிலும், அமெரிக்கா அதற்கு பொருளாதார தடைவிதித்து விடுமோ என்ற அச்சத்தில் அது மூழ்கியிருப்பதுதான் இந்தத் திட்டத்துக்கு நிதியளிப்பதில் தாமதம் காட்டுகிறது என இந்தியாவுக்கு வெளிப்படையான காரணங்களாக இருக்கின்றன.

அதன் விரும்பத்தகாத அம்சத்துக்கு இடையேயும் அமெரிக்கா அதனை அனுமதிக்கிறது. அது ஆப்கானிஸ்தான் வர்த்தகத்தை அதிகரிக்கும் என்று நம்புகிறது. பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தைச் சார்ந்திருப்பது குறையும் என்றும் நம்புகிறது. கராச்சி துறைமுகம் தூரத்தில் இருப்பது மட்டுமின்றி, கொஞ்சம் சிக்கலானதும்கூட. எனினும், சமீபத்தில், அவர்களின் பொருள்களை வாகா எல்லைவரை கொண்டுவர காபூல் அரசைப் பாகிஸ்தான் அனுமதித்தது. இந்த நிலைப்பாட்டில்தான் இந்தியாவுக்கான அச்சங்கள் அதிகரித்துள்ளன.

உண்மையான காரணம் என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால், இந்தியா ஈரானிலிருந்து விலகியே இருக்கிறது. காஷ்மீரின் அந்தஸ்து குறித்து இந்திய அரசு 370ஆவது பிரிவை ரத்துசெய்ததற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்ததுதான் அதற்குக் காரணம்.

பொதுமக்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்துவதாக இந்திய அரசுக்கு எதிராக ஈரானிய அரசு விமர்சனம் செய்தது, இது இஸ்லாமிய உலகில் அமைதியின்மைக்கு ஒரு காரணமாக அமைந்தது. பின்னர், ஈரானின் தலைவர் அயத்துல்லா கமேனி, இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும் கருத்து தெரிவித்தார். இது எவ்வாறு இஸ்லாமியர்களுக்கு எதிராக இருக்கிறது என்ற தகவல்களையும் முன்வைத்தார். பலரால் படுகொலை என்று வர்ணிக்கப்படும் டெல்லி வன்முறை, ஈரானியர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

ஈரானுக்கு காஷ்மீர் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. அதனை அவர்கள் ஷாஹீர்-இ-ஈரான் அல்லது மினி ஈரான் என்று அழைக்கின்றனர். காஷ்மீரின் நிலையற்ற தன்மை, இந்தியா, பாகிஸ்தான் இடையே பகைமையை அதிகரிக்கும் என்று நம்புகின்றனர். எனவே இதில் தூதரக ரீதியாகத் தலையிடுவதை அவர்கள் விரும்பினர்.

இதன் காரணமாக பலுசிஸ்தான் மாகாணத்திலுள்ள சபாஹரில் இந்தியாவுக்கு முக்கியமான வெளியைக் கொடுக்க ஈரான் முயற்சி செய்தது. பாகிஸ்தானின் இலக்குகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இருக்கும் என்று இதனை ஈரான் கருதியது.

இதன் மூலம் பாகிஸ்தானைக் கட்டுப்படுத்தவும், காஷ்மீர் விஷயத்தில் இந்தியாவுடன் நெருங்கி இருக்கவும், தீவிரமாகப் பின்தொடரவும் புகழ்பெற்ற ஈரானின் ஜெனரல் காசிம் சுலைமாணி விரும்பினார்.

குட்ஸ் படையின் தலைவரான அவர், சபாஹரில் இந்தியா விரைவாக முன்னேற வேண்டும் என்றும், அதன் முக்கிய இலக்குகளை அடைய வேண்டும் என்றும் விரும்பினார். இதன் காரணமாக அவர் அமெரிக்காவால் கொல்லப்பட்டார்.

ஈரான் அதன் கடமையை, சபாஹரை சீனாவை நோக்கி தள்ளிவிடவில்லை. ஆனால், அது நினைத்திருந்தால் அதனை எளிதாகச் செய்திருக்க முடியும். ஏனெனில், பாகிஸ்தானின் குவதார் துறைமுகத்திலிருந்து வெறும் 70 கி.மீ. தூரத்தில்தான் சபாஹர் இருக்கிறது.

குவதார் துறைமுகத்தை, சீனா-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதையின் துறைமுகமாக சீனா முன்னெடுத்திருக்கிறது. அப்படி நடந்திருந்தால், சீனாவும் சபாஹரையும் கூடவே மிகவும் மகிழ்ச்சியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கும்.

ஆனால், இந்தியாவின் அமெரிக்க உடனான நெருக்கம், தமது முக்கியமான இடம் இந்தியாவுக்கு உதவும் என்றும், பாகிஸ்தானை ஓரங்கட்டி விட்டு, மத்திய ஆசியாவில் முன்னுக்கு வருவது பற்றியும் ஈரான் உணர்ந்திருந்திருந்தது.

ஈரான் தமது பண்டைய நாகரிகம் மற்றும் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை ஆகியவற்றில் பெருமை கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் பொருளாதார தடைகளால் திணறடிக்கப்பட்டபோதுகூட தமது சுதந்திரத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதில் அந்த நாடு மிகவும் கவனமாக இருந்தது.

அமெரிக்காவின் பொருளாதார தடைகளால் எண்ணெய் ஏற்றுமதி உள்ளிட்டவை நிறுத்தப்பட்டதன் காரணமாக ஹார்முஸின் நீரணையில் உள்ள பந்தர் அப்பாஸ் துறைமுகத்தின் வழியேயான வர்த்தகம் குறைந்துபோன போதிலும்கூட, இந்தியாவுடன் அமெரிக்கா நெருங்கிவருவதால் இந்தத் துறைமுகம் வர்த்தகத்துக்காகத் திறக்கப்படும் என்று நம்பியது. எனினும் இந்தியா முழுமையாக அந்த வாய்ப்பைத் தவிர்க்கவில்லை.

அந்தத் துறைமுகத்தின் முழு வளத்தையும் உணர்ந்தே இருந்தது. ஆப்கானிஸ்தான் குறித்த தன்னுடைய சுயமான சந்தேகங்கள் மற்றும் காரணங்களை இந்தியா கொண்டிருந்தது.

தலிபான் ஆட்சிக்கு வந்தால், அதன் ஆப்கானிஸ்தானின் முதலீடுகள் என்ன ஆகுமோ என்ற கவலையில் இந்தியா இருந்தது. அமெரிக்க பேச்சுவார்த்தையில் பங்கேற்ற சல்மே காலிசாத் அளித்த புதிய ஒப்பந்தம் இந்திய முதலீட்டைப் பாதுகாக்குமா? தலிபான் தோழமையான குரலை வெளிப்படுத்தினாலும், அவர்கள் காபூலை ஆக்கிரமிக்கும்போது என்ன நேரும் என்பதை யாராலும் எளிதாக யூகிக்க முடியும்.

கடந்த காலங்களில், அவர்கள் சட்டத்தை மதிக்காத குழுவாகவே செயல்பட்டனர். ஒப்பந்தங்களைத் துச்சமாக மதித்தனர். இந்தியாவின் தயக்கத்துக்கு இதுதான் முக்கியக் காரணம். லடாக்கின் வடக்குப் பகுதியில் இந்தியா-சீனா இடையேயான பிரச்னை எப்படி முடிவுக்கு வரும் என்று ஈரானும் மிகவும் நெருக்கமாகக் கவனித்துவருகிறது.

சீனா, இந்தியப் பகுதியில் உள்ள நிலத்தை ஆக்கிரமித்த விதம் அமெரிக்காவின் ஆதரவு இல்லாததற்கு அப்பால், அந்த விருப்பத்தைப் பார்க்க முடியாது என்ற அவர்களுடைய எண்ணத்தில் ஒரு தோற்றத்தை உருவாக்கியது. சீனா, தம் தயக்கத்திலிருந்து இறங்கிவர மறுக்கிறது. தெற்கில் அதிகாரத்தை மறுசீரமைக்கிறது. இந்த மாற்றங்களை எதிரொலிக்கும் வகையில் சீனாவை நோக்கி ஈரான் அடியெடுத்து வைக்கிறது.

அமெரிக்காவின் பொருளாதார தடைகளால் ஈரான் மீண்டும் பிரச்னைகளைச் சந்திக்கிறது. 400 பில்லியன் டாலர் மதிப்புள்ள பெரிய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டும் 2016ஆம் ஆண்டிலிருந்து அது நிறுத்திவைக்கப்பட்டதால் எப்படியெல்லாமோ நிதி மற்றும் வாய்ப்புகள் இல்லாமல் வாடியது, சீனாவுக்கு தம்முடைய நிலத்தைக் கொடுப்பதில்லை என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது.

ஆனால், அவர்கள் இரண்டு ஆசிய ஜாம்பவான்களுக்கு இடையிலான மோதலின் காட்சியாக மாறாத வகையில், தங்கள் வெளியுறவுக் கொள்கையை மறுசீரமைத்திருப்பார்கள் என்று அவர்கள் கருதுகின்றனர்.

சபாஹர் ரயில்வே திட்டத்தில், உண்மையில் இந்தியா ஒரு துல்லியமான அணுகுமுறையில் இல்லை. சீனாவின் வலியுறுத்தலால், இந்தப் பிராந்தியத்தில் கள நிலவரம் என்பது மாறியிருக்கிறது என்பதுதான் இதன் உண்மையான பொருளாக இருக்கிறது. பொருளாதார சக்தியாக இந்தியாவின் முக்கியத்துவம் குறைந்திருக்கிறது. தொற்றுக்குப் பிந்தைய உலகில் நாடுகள் அதனைச் சரிசெய்யும்.

இதையும் படிங்க:'ஈரான் மீதான அமெரிக்காவின் கட்டளைகளுக்கு இந்தியா அடிபணியவில்லை' - இந்திய தூதர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.