ETV Bharat / opinion

வாக்குப்பதிவின்போது வன்முறையை கட்டுப்படுத்துமா திரிணாமுல்! - திரிணாமுல் காங்கிரஸ்

இடது சாரி முன்னணி அல்லது இன்னும் துல்லியமாக சொன்னால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் மம்தா பானர்ஜிக்கும் ஜங்கல்மஹாலின் ரத்தம் தோய்ந்த வரலாற்றில் என்னவெல்லாம் நடைபெற்றது என்பது தெரிந்த ஒன்றுதான். கார்பெட்டா மற்றும் சல்போனி தொகுதிகளில் ரத்தம் என்னவெல்லாம் செய்தது என்பதும் அவர்களுக்குத் தெரிந்த ஒன்றுதான்.

மேற்குவங்கம்
மேற்குவங்கம்
author img

By

Published : Mar 27, 2021, 8:21 PM IST

மேற்கு வங்கத்தின் ஜங்கல்மஹால் எனும் சிவந்த வறண்ட கீறல் விழுந்த பூமி தண்ணீர் இன்றி தவிக்கிறது. ஆனால், அதன் அடி ஆழத்தில் ரத்தம் ஓடுகிறது. ஜார்கிராம், பாங்குரா, புருலியா, பாஸ்சிம் மற்றும் புர்மா மிட்நாபூர் மாவட்டங்களில் சனிக்கிழமையன்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடக்கும் தொகுதிகளில் தங்கள் வாக்குகளை செலுத்துவதற்காக மக்கள் வாக்குச்சாவடிக்கு வெளியே வரிசை கட்டி நிற்கின்றனர்.

மாநிலத்தில் தேர்தல் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடைபெற முதல் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் 30 தொகுதிகளில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், மத்திய ஆயுதப்படையின் 732 கம்பெனி வீரர்கள் 10, 288 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருப்பதால் மட்டும் கார்பேட்டா அல்லது சால்போனி போன்ற தொகுதிகளில் உள்ள மக்களின் மனதில் படிந்துள்ள அச்சத்தை நீக்க போனதாக இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பின்பூர், நாயகிராம், கோபிபல்லவ்பூர், ஜார்கிராம், பாக்முண்டி, பலரம்பூர் அல்லது பண்டோவன் தொகுதிகளில் கடந்த காலத்தின் ரத்த தோய்ந்த நிகழ்வுகளை விட்டுச் சென்றிருக்கும் மாவோயிஸ்ட்தீவிரவாதத்தால் படிந்துள்ள அச்சத்தை போக்கத்தான் முடியுமா? ஜனநாயக கொண்டாட்டமானது மக்களிடம் பெரும் அளவில் நம்பிக்கையைக் கொண்டு வரும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால், இடது சாரி முன்னணி அல்லது இன்னும் துல்லியமாக சொன்னால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் மம்தா பானர்ஜிக்கும் ஜங்கல்மஹாலின் ரத்தம் தோய்ந்த வரலாற்றில் என்னவெல்லாம் நடைபெற்றது என்பது தெரிந்த ஒன்றுதான். கார்பெட்டா மற்றும் சல்போனி தொகுதிகளில் ரத்தம் என்னவெல்லாம் செய்தது என்பதும் அவர்களுக்குத் தெரிந்த ஒன்றுதான்.

மற்ற எல்லோரையும் விடவும் கார்பெட்டா தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் தாபான் கோஸ், சல்போனி தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சுசாந்தா கோஸ் இருவருக்கும் அதிகமாகவே இந்த ரத்த வரலாறு பற்றித் தெரிந்திருக்கும்.

ஒவ்வொரு முறை இந்த இரண்டு தொகுதிகளில் தேர்தல் நடைபெறும் சமயங்களின் போதெல்லாம் வாய்ப்புகளை வேட்டையாடிய மார்க்சிஸ்ட் கட்சியின் அந்த 2001ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி இரவு நடைபெற்ற சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன.

இன்றைக்கு மீண்டும் இது நிகழுமா, என்ற கேள்வி ஒருபுறம் இருக்கிறது. கார்பெட்டாவின் சோட்டோ-அங்காரியா கிராமத்தில் துரதிஷ்டமான அந்த இரவில் நிகழ்ந்த ரத்த வன்முறையில் பலர் கொல்லப்பட்டனர். மார்க்சிஸ்ட் கட்சியின் மீது விசுவாசம் கொண்டிருந்ததாகக் கூறப்படும் குண்டர்களால் பல்வேறு திரிணாமூல் காங்கிரஸ் ஆதரவாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அந்த சமயத்தில் இடதுசாரி முன்னணி அரசில் சுசாந்தா கோஸ் ஒரு அமைச்சராக இருந்தார். அவரது இரண்டு நெருங்கிய சகாக்களான தாபான் கோஸ் மற்றும் கட்சியின் மண்டல கமிட்டி செயலாளர் சுகுர் அலி இருவரும்தான் இந்த படுகொலைகளை பின்னணியில் இருந்து இயக்கியவர்கள் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

கார்பெட்டா எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட வழக்கில் தொடர்புடையவர் என்று சுசாந்தா கோஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவரை சஸ்பென்ட் செய்துள்ளது. பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில் 2002 ம் ஆண்டு பெனாச்சப்ராவில் கோஸின் வீட்டுக்கு அருகில் இருந்து ஏழு எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டன.

கார்பெட்டா எலும்பு கூடு வழக்கு என்று சொல்லப்படும் இந்த வழக்கில் மேற்கு வங்க சட்டப்பேரவையில் 1987ம் ஆண்டு முதல் எம்எல்ஏவாக இருக்கும் சுசாந்தா, இந்த வழக்கை நீர்த்துப் போகச்செய்யும் வகையில் தலையிடுவதாக போலீசாரால் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

கடந்த 2001ம் ஆண்டு தேர்தலில் மம்தா பானர்ஜி கேஷ்பூர் சம்பவம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவு என்ற கோஷத்தை முன் வைத்த போதும் 2011ம் ஆண்டு திரிணாமூல் காங்கிரஸ் அலையில் வென்ற போதும் அங்கு சுசாந்தா கோஸ் நேர்த்தியாக களம் இறக்கப்பட்டார். ஆனால், 2016ம் ஆண்டு தேர்தலின்போது பாசிம் மெடினிபூரில் நுழைவதற்கு சுசாந்தாவுக்கு நீதிமன்றம் தடைவிதித்தது.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அங்கே 61000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சக்கரம் திரும்ப மூன்று ஆண்டுகள் ஆனது. 2019ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் வெளியானபோது, இதே கார்பெட்டா தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை விடவும் பாஜக 8,000ம் வாக்குகள் அதிகம் பெற்றது.

சல்போனி, கார்பெட்டா அல்லது கெஜூரி தொகுதிகளில் இருந்து போட்டியிட ஹிமான்சு தாஸ் அல்லது தாபான் கோஸ் அல்லது சுசாந்தா கோஸ் ஆகியோரை விடவும் சிறந்தவர்கள் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தெரிந்திருக்கிறது.

ஒரு முறை சிவப்பு கோட்டையைத் தக்கவைக்க களம் இறக்கப்பட்ட இந்த வேட்பாளர்களே இன்றைக்கு முதல் கட்டத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளின் வாக்காளர்களை எதிர்கொள்வதற்காகவும் நிறுத்தப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் முதல் கட்டத்தேர்தல் நடைபெறும் 30 தொகுதிகளைக் கொண்ட ஜாங்கல்மஹால் பகுதி என்பது பாஜகவுக்கு புதிய களமாகத் தோன்றலாம்.

கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் இதில் 27 தொகுதிகளை கைப்பற்றியது. இரண்டில் காங்கிரஸ் கட்சியும் ஒன்றில் இடது சாரி கட்சியும் வென்றன. பாஜகவுக்கு அப்போது ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை. ஆனால், 2019்ம் ஆண்டு தேர்தலில் இந்த கணிப்புகள் பொய்யாகிப் போயின.

அப்போது திரிணாமூல் காங்கிரஸ் 10 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. மீதி 20 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. இப்போது காங்கிரஸ், இடது சாரி கட்சிகள் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி என்ற அடிப்படையில் களம் இறங்கி உள்ளன.

ஆனால், இடதுசாரி கட்சிகள் எந்தவித உதவியும் இல்லாமல் இருக்கின்றன.புர்பா மெடினிப்பூர் மாவட்டத்தின் இதர 6 தொகுதிகளுடன் 2019ம் ஆண்டு தேர்தல் முடிவின் படி ஜார்கிராம் மாவட்டத்தில் பின்பூர் தொகுதியை மட்டுமே மம்மா பெற்றார். காவி கட்சியானது இன்றைக்கு முதல் கட்டத்தேர்தல் நடக்கும் மற்ற எல்லா இடங்களையும் கிட்டத்தட்ட கைப்பற்றியது.

கடந்த 2016ம் ஆண்டு மற்றும் 2019ம் ஆண்டுக்கு இடையே வெறுமனே 3 சதவிகிதமாக இருந்த பாஜகவில் வாக்குகள் சாதனை அளவாக ஒரே ஜம்பில் 38 சதவிகிதமாக அதிகரித்தது. இங்கு மீண்டும் ஒரு ரத்தம் தோய்ந்த நிகழ்வை தடுப்பது மம்தா பானர்ஜிக்கு ஒரு நேரடி சவாலாக இருக்கும். சவாலில் அவர் வென்றாரா என்பது மே 2ம் தேதியன்று நடக்கும் வாக்கு எண்ணிக்கையில்தான் தெரியவரும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.