Live: Allanganallur Jallikattu: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: சீரிப்பாயும் காளைகளை அடக்க துடிக்கும் வீரர்கள்! - Madurai Allanganallur Jallikattu
🎬 Watch Now: Feature Video
Published : Jan 17, 2024, 7:34 AM IST
|Updated : Jan 17, 2024, 9:20 AM IST
மதுரை : உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தைத்திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுகள் முறையை ஜனவரி 15, 16 ஆம் தேதிகளில் நடைபெற்று முடிந்து உள்ள நிலையில், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணி அளவில் உறுதிமொழி உடன் தொடங்கியது.
மாவட்ட ஆட்சியர் சங்கீதா உறுதிமொழி வாசிக்க வீரர்கள் தொடர்ந்து உறுதி எடுத்துக் கொள்ள உள்ளனர். தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைத்தார். துவக்க விழாவில் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
ஒட்டுமொத்தமாக 1,200 காளைகளும், 800 மடுபிடி வீரர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கின்றனர். போட்டியில் ஒட்டுமொத்தமாக 10 சுற்றுகள் வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு சுற்றிலும் 50 வீரர்கள் களமிறங்குவர். அதில் அதிக காளைகளைப் பிடிக்கும் வீரர் அடுத்தடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவார். மாலை 5 மணி வரை போட்டி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Video Credits : நன்றி. சு.வெங்கடேசன், நாடாளுமன்ற உறுப்பினர்.