வாய்துர்நாற்றத்திற்கு தீர்வு
பெருஞ்சீரகத்தை சிறிதளவு வாயில் போட்டு மென்று தின்றால் வாய் துர்நாற்றத்தை போக்குவதோடு மட்டுமல்லாமல் பற்கள் மற்றும் ஈறுகளுக்கு உறுதியையும் அளிக்கிறது. சாப்பிட்டதற்கு பிறகு நம்மில் சிலர் பெருஞ்சீரகத்தை வாயில் போட்டு மெல்லுவோம். இப்படி செய்வதால் சாப்பாடு எளிதில் செரிமாணம் ஆவதோடு மட்டுமல்லாமல் செரிமாண மண்டலத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
அஜீரணத்தை போக்கும்
குடும்பத்தில் உள்ள பாட்டிகள் குழந்தைகளுக்கு அஜீரணக்கோளாறு ஏற்பட்டால் சிறிது பெருஞ்சீரகத்தை வாயில் போட்டு மென்று தின்பதற்கு கொடுப்பார்கள். இதை தின்றவுடன் உடனே அஜீரணக் கோளாறு நீங்கும்.
எடையை குறைக்கும்
பெருஞ்சீரகத்தை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து ஆறவைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை குறைவதோடு மட்டுமல்லாமல் வளர்ச்சியையும் அதிகரிக்கும்.
முகப்பருவை போக்கும்
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான ஆண்கள் வேலை விஷயமாக வெளியில் அலைவதால் முகப்பருக்கள் வந்து முகம் முரட்டுதனமாக காட்சியளிக்கும். இப்படி அவஸ்தைப்படும் ஆண்கள் சிறிது பெருஞ்சீரகத்தை ஊறவைத்து பேஸ்ட் போன்று அரைத்து முகத்தில் தடவி வந்தால், முகப்பருக்கள் மறையும். அதுமட்டுமல்லாமல் முகம் பொலிவுரும்.
ரத்ததை சுத்தப்படுத்தும்
பெருஞ்சீரக எண்ணையை உணவில் சேர்த்து வந்தால் அதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடன்ட் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கிச் சுத்தப்படுத்தும்.
ரத்த அழுத்ததை சீராக்கும்
பெருஞ்சீரகத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், உடலில் சுரக்கும் தேவையற்ற திரவங்களை தடுத்து ரத்த அழுத்தத்தை சீராக்குவதோடு, இதயத்தையும் பாதுகாக்கும்.
சீறுநீரகப்பிரச்னை
பெருசீரகத்தை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால், சிறுநீரக பாதையில் ஏற்படும் தொற்றுக்களை தடுக்கிறது. மேலும் சிறுநீரக உற்பத்தியையும் அதிகரிக்கிறது.
ஆயுர்வேத்தின் பயன்பாடு
பெருஞ்சீரகத்தை ஆதிகாலம் முதல் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பல நோய்களுக்கு இவை தீர்வளிக்கவல்லது. பெருஞ்சீரக எண்ணையை உடம்பில் தடவி வருவதால், நரம்பு சம்மந்தமான நோய்களை குணமாக்குகிறது.