ETV Bharat / lifestyle

நான்கு சாதனங்களில் ஒரே வாட்ஸ்அப் கணக்கு - விரைவில் வரவிருக்கும் அட்டகாசமான வாட்ஸ்அப் வசதி - வாட்ஸ்அப் நிறுவனத்தின் புதிய வசதி

வாஷிங்டன் : ஒரே சமயத்தில் ஒரு வாட்ஸ்அப் கணக்கை நான்கு சாதனங்களிலிருந்து பயன்படுத்தும் புதிய வசதி சோதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

WhatsApp
WhatsApp
author img

By

Published : Jun 15, 2020, 5:10 PM IST

ஒருவர் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் வாட்ஸ்அப் மூலம் அவரை எளிதில் தொடர்பு கொள்ளலாம். இதனாலேயே உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் சாட்டிங் செயலியாக வாட்ஸ்அப் உள்ளது.

இருப்பினும், வாட்ஸ்அப் செயலியில் பயனாளர்கள் விரும்பும் சில வசதிகள் இன்னும் சேர்க்கப்படவில்லை. குறிப்பாக ஒரே நேரத்தில் ஒரு வாட்ஸ்அப் கணக்கை பல சாதனங்களில் பயன்படுத்தும் வசதியை பயனாளர்கள் நீண்ட நாள்களாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், ஒரு வாட்ஸ்அப் கணக்கை ஒரே சமயத்தில் நான்கு சாதனங்களிலிருந்து பயன்படுத்தும் புதிய வசதியை, வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது சோதனை செய்து வருவதாக WABetaInfo தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. வைஃபை மூலம் கணக்கின் தகவல்கள் மற்ற சாதனங்களுக்கு பகிரப்படும் வகையில் இந்த வசதி இருக்குமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

  • Yes, it's the ability to use your WhatsApp account from 4 devices at the same time.
    Under development, but it's great!

    📱📱📱📱 pic.twitter.com/JYvtMahrag

    — WABetaInfo (@WABetaInfo) June 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தற்போது ஸ்மார்ட்போனைத் தவிர கூடுதலாக ஒரு சாதனத்தில் மட்டும் வாட்ஸ்அப் வெப் செயலியைப் பயன்படுத்தி வாட்ஸ்அப்பை உபயோகிக்கலாம். இருப்பினும், இந்தப் பதிவு பயனாளர்களிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. பயானாளர்களின் இந்த சந்தேகங்களுக்கான விடைகள் அனைத்தும் வாட்ஸ்அப் இந்த வசதியை வெளியிடும்போதுதான் தெரியவரும்.

இதுதவிர, குறிப்பிட்ட தேதிகளை தேர்ந்தெடுத்து, அந்தத் தேதிகளின் மெசேஜ்களை தேடும் வசதியையும் வாட்ஸ்அப் நிறுவனம் சோதனை செய்துவருவதாக WABetaInfo தெரிவித்துள்ளது.

  • 🔍 WhatsApp is testing a Search by date feature!

    The feature is under development and it will be available in future.https://t.co/jdgGHOPGQF

    — WABetaInfo (@WABetaInfo) June 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் விலை - காங்கிரஸ் வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.