ETV Bharat / lifestyle

விவோ நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்! - விவோ வி20 SE விலை

விவோ நிறுவனம் விவோ வி20 SE என்ற புதிய ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் வெளியிட்டுள்ளது.

Vivo V20 SE
Vivo V20 SE
author img

By

Published : Nov 2, 2020, 7:55 PM IST

ரியல்மி நிறுவனம் புதிதாக விவோ வி20 SE என்ற புதிய ஸ்மார்ட்போனை இன்று வெளியிட்டுள்ளது. சுமார் 21 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ள இந்த ஸ்மார்ட்போன் மக்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என்று அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இது குறித்து விவோ இந்தியாவின் Brand Strategy பிரிவு இயக்குநர் நிபுன் மரியா கூறுகையில், "எங்கள் வி-சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் எப்போதும் வாடிக்கையாளர்களை மனத்தில் வைத்துக்கொண்டு அவர்களுக்கு புது வசதிகளை கொடுப்பதில் கவனம் செலுத்துகிறது.

இதன் மூலம் ஸ்மார்ட்போன் பயன்பாடு எளிமையாகிறது. இந்த புதிய விவோ வி 20 SE மூலம் எங்களால் வடிக்கையாளர்களை எளிதில் கவர முடியும் என்று நம்புகிறேன்" என்றார்.

விவோ வி 20 SE சிறப்புகள்

  • 6.44இன்ச் டிஸ்பிளே
  • ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
  • பின்புறம் 48 மெகாபிக்சல் கேமரா + 8 மெகாபிக்சல் கேமரா + 2 மெகாபிக்சல் கேமரா
  • முன்புறம் 32 மெகாபிக்சல் கேமரா
  • 4100mah பேட்டரி
  • 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
  • ஆண்ட்ராய்டு 11ஐ மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஃபன்டச் 11 இயங்குதளம்
  • கறுப்பு மற்றும் பச்சை நிறங்களில் கிடைக்கிறது

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ரூ. 20,990க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் நாளை (நவ.3) முதல் விவோ அதிகாரப்பூர்வ தளத்திலும், அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்களிலும் விற்பனைக்கு வருகிறது.

இதையும் படிங்க: இந்திய கிரிக்கெட் அணியின் ஆடை ஸ்பான்சராக மொபைல் பிரீமியர் லீக் தேர்வு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.