சியோல் (தென் கொரியா): மொபைல் வேல்ட் காங்கிரஸ் 2021இன் சிறந்த ஸ்மார்ட்போனுக்கான விருது, சாம்சங் கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா கைபேசிக்கு கிடைத்துள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் பிரீமியம் ரகத் தொகுப்பில் கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.1,05,000 க்கும், அதன் 16 ஜிபி + 512 ஜிபி வேரியண்ட் ரூ.1,16, 999க்கும் இந்தாண்டு ஜனவரி மாதம் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மட்டுமே கிடைக்கிறது. இதன் விலை ரூ.1,05,999 ஆக சாம்சங் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.
இது டிவியா இல்ல... உங்களை பிரம்மிப்பில் ஆழ்த்தும் சாம்சங் 'தி ஃபிரேம் டிவி'
சாம்சங் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
- ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் அடிப்படையிலான ஒன் யுஐ
- மேம்பட்ட 6.8 அங்குல எட்ஜ் கியூஎச்டி + ஓலெட் தொடுதிரை (1,440x3,200 பிக்சல்கள்) டைனமிக் அமோலேட் 2 எக்ஸ் இன்ஃபினிட்டி-ஓ டிஸ்ப்ளே
- எச்டிஆர் 10 + ஆதரவு மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 10 ஹெர்ட்ஸ் வரை குறைக்க முடியும்
- எஸ் பென் ஆதரிக்க வாக்கோம் தொழில்நுட்பம்
- உலகளாவிய சந்தைகளில் சாம்சங் நிறுவனத்தின் பிரத்யேக ஆக்டா கோர் எக்ஸினோஸ் 2100 SoC / அமெரிக்காவில் ஸ்னாப்டிராகன் 888 5ஜி
- 12 ஜிபி / 16 ஜிபி எல்பிடிடிஆர் 5 ரேம்
- பின்பக்கம் 4 படக்கருவிகள் - 108 மெகாபிக்சல் சென்சார் (எஃப் 1.8 லென்ஸ் ஓஐஎஸ் ஆதரவுடன் / எஃப் 2.2 லென்ஸுடன் 12 மெகாபிக்சல் டூயல் பிக்சல் சென்சார், எஃப் 2.4 டெலிஃபோட்டோ லென்ஸ் ஓஐஎஸ் ஆதரவுடன் 10 மெகாபிக்சல் சென்சார் / எஃப் 4.9 டெலிஃபோட்டோ லென்ஸ் ஓஐஎஸ் ஆதரவுடன் மற்றொரு 10 மெகாபிக்சல் சென்சார்.
- 40 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா (எஃப் 2.2 லென்ஸ்)
- 128 ஜிபி / 256 ஜிபி / 512 ஜிபி சேமிப்பு திறன்
- 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 6 இ, ப்ளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
- அனைத்து விதமான சென்சார்களுடன் புதிதாக அல்ட்ராசோனிக் சென்சார்
- 5,000 எம்ஏஎச் பேட்டரி
- யூ.எஸ்.பி பி.டி 3.0 மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் 2.0 வயர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு
- அளவீட்டில் 165.1x75.6x8.9 மிமீ
- எடையில் 229 கிராம்