இந்த ஆண்டுத் தொடக்கத்தில் சாம்சங் கேலக்ஸி M30 மொபைல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில், சாம்சங் M30s என்ற புதிய மொபைல் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. சாம்சங் கேலக்ஸி M30s இதுவரை சாம்சங் M சீரிஸில் பயன்படுத்தப்படாத புத்தம் புது எக்ஸினோஸ் பிராசஸரைப் பயன்படுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி M30 போலவே இதிலும் பின்புறம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் M30-இல் பயன்படுத்தப்பட்ட 13 மெகாபிக்சல் கேமராவுக்கு பதிலாக 48 மெகாபிக்சல் கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுவரை எந்த மொபைலிலும் பயன்படுத்தாத புதுவகை பேட்டரி இந்த மொபைலில் பயன்படுத்தப்படவுள்ளது, இதன் முக்கிய சிறப்பம்சமாகும். மேலும், அதிவேகமாக சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜ் வசதியும் இதில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மொபைல் ஃபோனின் விலை ரூ. 13 ஆயிரம் முதல் ரூ. 17 ஆயிரம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ. 12 ஆயிரம் - ரூ. 15 ஆயிரம் ரூபாய் செக்மென்டில் ரெட்மி நிறுவனம் செலுத்தி வந்த ஆதிக்கத்தை உடைக்க சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டு புதிதாக M மற்றும் A சீரிஸ் மொபைல்ஃபோன்களை களமிறக்கியது. அதற்குப் பலனும் கிடைத்தது. இதன் காரணமாக அடுத்து வெளியாகவுள்ள சாம்சங் கேலக்ஸி M30s மீது பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த மொபைல் அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.