சாம்சங் நிறுவனத்தின் அடுத்த கண்டுபிடிப்பான புதிய கேலக்ஸி எப்62 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் மூலம், சாம்சங் நடுத்தர விலை ஸ்மார்ட்போன் பிரிவில் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.
கேலக்ஸி எப்62 ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள்:
- 6.7-இன்ச் AMOLED டிஸ்பிளே
- 7என்எம் எக்ஸிநோஸ் 9825 சிப்செட் வசதி
- ஆண்ட்ராய்டு 11
- 64 எம்பி பிமைரி கேமரா உள்பட மொத்தம் நான்கு பின்புற கேமராக்கள்
- 32 எம்பி செல்பி கேமரா,
- 6 ஜிபி, 8 ஜிபி ரேம் மாடல்
- 128 ஜிபி ஸ்டோரேஜ்
- 7000 எம்ஏஎச் பேட்டரி
- பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் கைரேகை சென்சார்
பச்சை, கிரீன் என இரண்டு நிறங்களில் வெளியாகவுள்ள இந்த ஸ்மார்ட்போனுக்கு, பயனாளர்கள் மத்தியில் நல்ல வரவெற்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'ஐ லவ் யூ, கல்யாணம் பண்ணிக்கலாமா' - 'அலெக்ஸா'விடம் தினமும் கேட்கும் இந்தியர்கள்