Latets Tech News: இந்திய ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் சுமார் 30 சதவிகிதத்தைத் தன் கையில் வைத்திருக்கும் சியோமி, புதிதாக வெளியிட்ட ரெட்மி 8 என்ற புதிய மொபைலின் விற்பனை இன்று மதியம் ஃப்ளிப்கார்ட், எம்ஐ தளங்களில் தொடங்கியுள்ளது.
- ரெட்மி 8இன் சிறப்பம்சங்கள்
- 6.22 இன்ச் டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 439 பிராஸசர்
- பின்புறம் 12 மெகா பிக்சல் கேமரா + 2 மெகா பிக்சல் கேமரா
- முன்புறம் 8 மெகா பிக்சல் கேமரா
- 5000mah பேட்டரி
- கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதி
- நீலம், கறுப்பு, சிவப்பு ஆகிய நிறங்களில் வெளியாகியுள்ளது
இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 9 பை(Pie)யை மையமாக வைத்து சியோமி உருவாக்கியுள்ள MIUI 10 இயங்கு தளத்தைக் கொண்டு இயங்குகிறது. 4GB RAM + 64GB சேமிப்புத் திறனைக்கொண்ட இந்த Redmi 8 ஸ்மார்ட்போன் ரூ.8,999க்கு விற்கப்படுகிறது. மேலும், ரெட்மி நிறுவனம் தனது 5ஆவது ஆண்டைக் கொண்டாடும் வகையில், முதல் 50 லட்சம் மொபைல்களை ரூ. 7,999க்கு விற்பனை செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:
நீட் பயிற்சி மையத்தில் வருமானவரித்துறை சோதனை: ஸ்டாலின் ட்வீட்!