நாளுக்கு நாள் தொழில்நுட்ப வளர்ச்சி புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. புதுவிதமான ஸ்மார்ட்போன்கள் பல்வேறு வசதிகளுடன் அறிமுகம் செய்யப்பட்டுவருகிறது.
அந்த வகையில், புதுவித கேமரா தொழில்நுட்பத்தை ஓப்போ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை வாங்குபவர்கள் கேமரா எங்கு இருக்குனு நிச்சயம் தேடுவார்கள்.
ஆம், ஓப்போவின் புதிய வெர்ஷன் அன்டர் ஸ்கிரீன் கேமரா, ஸ்மார்ட்போன் துறையில் நிச்சயம் புதிய புரட்சியை ஏற்படுத்தும். இந்த தொழில்நுட்பம் புகைப்படங்களின் தரம் குறையாமல் அழகான செல்பிக்களை எடுக்க வழிசெய்யும்
முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட அன்டர் ஸ்கிரீன் கேமரா தொழில்நுட்பம் புகைப்படங்களின் பிக்சல்களை குறைத்ததால், சிறிய பிக்சல்களை பயன்படுத்தி 440 PPI தரத்தில் புகைப்படங்களை மிகத் தெளிவாக பிரதிபலிக்கும் புதிய தொழில்நுட்பம் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ஓப்போ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது.
இதையும் படிங்க: கூகுள் மேப்ஸில் புது அப்டேட்... ஐபோன் பயனாளர்கள் குஷி