சீனா ஸ்மார்ட்ஃபோன் நிறுவனமான ஒன்பிளஸ் இந்தியா உள்ளிட்ட ஆசிய சந்தைகளில் தொடர்ந்து ஆதிக்கத்தைச் செலுத்திவருகிறது. ஆசியாவைத் தாண்டி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் தனது சந்தையை அதிகப்படுத்தும் நோக்கில் மே மாதம், பிரபல ஹாலிவுட் நடிகரும் மார்வல் பட வரிசைகளில் ஐயன் மேனாக நடித்துப் புகழ் பெற்றவருமான ராபர்ட் டவுனி ஜூனியரை ஒப்பந்தம் செய்தது.
இந்நிலையில் சீனா சமூக வலைதளமான வைபோவில் ஒன்பிளஸ் மொபைல்ஃபோனை விளம்பரப்படுத்தும் வகையில் செய்தி ஒன்றைப் பதிவிட்டிருந்தார். இது ஒரு சாதாரண விஷயம்தான். ஆனால் ஒன்பிளஸை விளம்பரப்படுத்தி அவர் இட்ட பதிவை ஹூவாவே பி30 புரோ (P30 pro) மொபைல்ஃபோன் பயன்படுத்தி என்பதுதான் இதில் ஹைலைட். ஆனால் இந்தப் பதிவு சிறிது நேரத்தில் வைபோ தளத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டது.
முன்னதாக இந்த ஆண்டு தொடக்கத்திலும் நைஜீரியாவில் சாம்சங் நிறுவனம் ஐபோனை பயன்படுத்தி ட்வீட் செய்து மாட்டிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.