கோவிட்-19 பரவல் காரணமாகச் சர்வதேச அளவில் பெரும்பாலான தொழிற்சாலைகள் முடங்கியுள்ளன. இதனால் பல நாடுகளின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு நிறுவனங்களும் தங்கள் புதிய தயாரிப்புகளின் வெளியீட்டைத் தள்ளிவைத்துள்ளன.
இருப்பினும், பிரபல சீன நிறுவனமான ஒன்பிளஸ் தனது புதிய ஸ்மார்ட்போன் மாடல்களான ஒன்பிளஸ் 8, ஒன்பிளஸ் 8 ப்ரோ ஆகியவற்றைக் கடந்த வாரம் வெளியிட்டது. அத்துடன் Bullets Wireless Z என்ற புதிய இயர்போன் மாடலையும் வெளியிட்டது.
இந்த ஸ்மார்ட்போன் வெளியானபோது அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளுக்கான விலை மட்டுமே அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் இந்தப் புதிய மாடல்களின் விலை என்னவாக இருக்கும் என்று வாடிக்கையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், இந்தியாவில் தனது தயாரிப்புகளுக்கான விலையை ஒன்பிளஸ் அறிவித்துள்ளது.
ஒன்பிளஸ் 8 விலை
- 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் - 41,999 ரூபாய்
- 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் - 44,999 ரூபாய்
- 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் - 49,999 ரூபாய்
ஒன்பிளஸ் 8 ப்ரோ விலை
- 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் - 54,999 ரூபாய்
- 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் - 59,999 ரூபாய்
-
Lots more to love
— OnePlus India (@OnePlus_IN) April 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Even lesser to spend #OnePlus8Series starting from ₹41,999 MRP
Get notified to know more - https://t.co/dIgjpfjHbN pic.twitter.com/kpNPm3ACDZ
">Lots more to love
— OnePlus India (@OnePlus_IN) April 19, 2020
Even lesser to spend #OnePlus8Series starting from ₹41,999 MRP
Get notified to know more - https://t.co/dIgjpfjHbN pic.twitter.com/kpNPm3ACDZLots more to love
— OnePlus India (@OnePlus_IN) April 19, 2020
Even lesser to spend #OnePlus8Series starting from ₹41,999 MRP
Get notified to know more - https://t.co/dIgjpfjHbN pic.twitter.com/kpNPm3ACDZ
இதேபோல Bullets Wireless Z என்ற புதிய இயர்போன் ரூ. 1,999-க்கு விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் மே மாதம் இவை விற்பனைக்குவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் அறிவிக்கப்பட்ட விலையைவிட குறைவு என்பதால் ஒன்பிளஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்
-
Now that's music for your ears 🎧
— OnePlus India (@OnePlus_IN) April 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
The OnePlus Bullets Wireless Z will be available for ₹1999!
Get notified - https://t.co/uV7vBkO740 pic.twitter.com/hZ2rlgGmwO
">Now that's music for your ears 🎧
— OnePlus India (@OnePlus_IN) April 19, 2020
The OnePlus Bullets Wireless Z will be available for ₹1999!
Get notified - https://t.co/uV7vBkO740 pic.twitter.com/hZ2rlgGmwONow that's music for your ears 🎧
— OnePlus India (@OnePlus_IN) April 19, 2020
The OnePlus Bullets Wireless Z will be available for ₹1999!
Get notified - https://t.co/uV7vBkO740 pic.twitter.com/hZ2rlgGmwO
ஒன்பிளஸ் 8 அம்சங்கள்
- 6.55 இன்ச் டிஸ்ப்ளே
- ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
- பின்புறம் 48 மெகாபிக்சல் கேமரா + 16 மெகாபிக்சல் கேமரா + 2 மெகாபிக்சல் கேமரா
- முன்புறம் 16 மெகாபிக்சல் ஹோல்பன்ச் கேமரா
- ஆண்ட்ராய்டு 10ஐ மையமாகக் கொண்டு இயங்கும் ஆக்ஸிஜன் இயங்குதளம்
- 4,300mah பேட்டரி
- நிறங்கள் - கறுப்பு, வெள்ளை, பச்சை
ஒன்பிளஸ் 8 ப்ரோ அம்சங்கள்
- 6.78 இன்ச் டிஸ்ப்ளே
- ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
- பின்புறம் 48 மெகாபிக்சல் கேமரா + 8 மெகாபிக்சல் கேமரா + 48 மெகாபிக்சல் கேமரா + 5 மெகாபிக்சல் கேமரா
- முன்புறம் 16 மெகாபிக்சல் ஹோல்பன்ச் கேமரா
- ஆண்ட்ராய்டு 10ஐ மையமாகக் கொண்டு இயங்கும் ஆக்ஸிஜன் இயங்குதளம்
- 4,510mah பேட்டரி
- நிறங்கள் - கறுப்பு, நீலம், பச்சை
இதையும் படிங்க: ஐபோனின் மலிவான ஸ்மார்ட்போன் விலை இவ்வளவா?