டெல்லி: ஃபின்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட நோக்கியா நிறுவனம் புதிய இரண்டு கைப்பேசிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இரண்டு நடுத்தர வகையைச் சேர்ந்த கைப்பேசியை நோக்கியா இந்தியாவில் களமிறக்கியுள்ளது. நோக்கியா 2.4, நோக்கியா 3.4 என்னும் அந்தக் கைப்பேசிகளை ரூ.15,000 விலைக்கு கீழே அறிமுகப்படுத்தியுள்ளது, பிற நிறுவன கைப்பேசிகளுக்குப் போட்டியாக இருக்கக்கூடும்.
ஆனால், நோக்கியா 2.4இல் ப்ளூடூத் 5 அம்சத்தினை கொடுத்துவிட்டு, மேம்பட்ட ரகமான நோக்கியா 3.4இல் ப்ளூடூத் 4.2 கொடுத்திருப்பது, சிறிதளவு ஏமாற்றும் விதமாகவே உள்ளது. மேலும், அதிவிரைவு மின்னூக்கி இடம்பெறவில்லை. நோக்கியா நிறுவனம்தான் அளிக்கும் கட்டமைப்பு, தூய்மையான ஆண்ட்ராய்டு மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ளது.
எனினும், காலஞ்சென்ற தொழில்நுட்பங்களை உள்புகுத்துவதென்பது, பயனர்களை மட்டுப்படுத்துவது போன்றதாகும். இதில், நோக்கியா நிறுவனம் அதீத கவனம் செலுத்த வேண்டும் என்பதே வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது.
நோக்கியா 2.4 சிறப்பம்சங்கள்
- 6.5 அங்குல எச்டி+ தொடுதிரை
- காட்சி விகிதம் 20: 9
- ஆண்ட்ராய்டு 10 / தயாராகவுள்ள ஆண்ட்ராய்டு 11
- 3 ஜிபி செயல்திறன் சேமிப்பு
- சேமிப்பகத் திறன் 32/64 ஜிபி
- மீடியாடெக் ஹீலியோ பி 22 செயல்திறன்
- பின்புற படக்கருவிகள்: 13 மெகாபிக்சல் முதன்மை சென்சாருடன் + 2 மெகாபிக்சல் படக்கருவி
- 5 மெகாபிக்சல் முன்பக்க படக்கருவி
- மைக்ரோ யூ.எஸ்.பி. (யூ.எஸ்.பி 2.0)
- உணரிகள்: சுற்றுப்புற ஒளி, ப்ராக்ஸிமிட்டி, ஆக்ஸிலரோமீட்டர் (ஜி-சென்சார்), பின்புற கைரேகை
- 5 வாட் மின்னூட்டும் திறன்
- 3.5 மிமீ ஆடியோ ஜாக்
- இரட்டை சிம் வசதி
- மின்கலச் சேமிப்புத் திறன் 4500 mAh
- புளூடூத் ® 5.0
- GPS / AGPS + GLONASS + Beidou
- அளவு: 165.85 x 76.30 x 8.69 மிமீ
- எடை: 189 கிராம்
- விலை: ரூ. 10,399
நோக்கியா 3.4 சிறப்பம்சங்கள்
- 6.39 அங்குல எச்டி+ பஞ்ச் துளைகொண்ட தொடுதிரை
- காட்சி விகிதம் 19.5: 9
- ஆண்ட்ராய்டு 10 / தயாராகவுள்ள ஆண்ட்ராய்டு 11
- 3/4 ஜிபி செயல்திறன் சேமிப்பு
- சேமிப்பகத் திறன் 32/64 ஜிபி
- குவால்காம் ஸ்னாப்டிராகன் ™ 460 செயல்திறன்
- பின்புற படக்கருவிகள்: 13 மெகாபிக்சல் முதன்மை சென்சாருடன் + 2 மெகாபிக்சல் காட்சி தெளிவு சென்சாருடன் + 5 மெகா பிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார்
- 8 மெகாபிக்சல் முன்பக்க படக்கருவி
- யூ.எஸ்.பி ‘சி’ வகை
- உணரிகள்: சுற்றுப்புற ஒளி, ப்ராக்ஸிமிட்டி, ஆக்ஸிலரோமீட்டர் (ஜி-சென்சார்), பின்புற கைரேகை, என்.எஃப்.சி (சில நாடுகளில் மட்டும்)
- 5 வாட் மின்னூட்டும் திறன்
- 3.5 மிமீ ஆடியோ ஜாக்
- இரட்டை சிம் வசதி
- மின்கல சேமிப்புத் திறன் 4000 mAh
- புளூடூத் ® 4.2
- Qualcomm® aptX ™ ஆடியோ தகவமைப்பு
- GPS / AGPS + GLONASS + Beidou
- அளவு: 160.97 x 75.99 x 8.7 மிமீ
- எடை: 180 கிராம்
- விலை: ரூ. 13,500 (உத்தேச விலை)