ஐடெல் மேஜிக் 2 4ஜி (itel Magic 2 4G): மிகக் குறைந்த விலை கைப்பேசி தொகுப்பில் (அதாவது 5000 ரூபாய்க்கும் கீழ்) தனது புதிய 4ஜி இணைப்புக் கொண்ட மேஜிக் 2 கைபேசியை ஐடெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் இதன் விலை வெறும் 2,349 ரூபாய் தான். வைஃபை இணைப்பு, ஹாட்ஸ்பாட் ஆதரவு, இணைய அணுகலை 8 சாதனங்களுடன் பகிரும் வசதி என அசத்தலான அம்சங்கள் இதில் அடங்கியுள்ளது.
இதில் தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, பஞ்சாபி, தெலுங்கு, பெங்காலி, கன்னடம், மலையாளம் ஆகிய ஒன்பது பிராந்திய மொழிகளுக்கான ஆதரவும் உள்ளது கூடுதல் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது.
அம்சங்களுக்கு குறைவில்லை... ஜியோனியின் அசத்தலான ஸ்மார்ட் வாட்சுகள்!
ஐடெல் மேஜிக் 2 4ஜி சிறப்பம்சங்கள்
- 2.4 அங்குல குவாட்டர் விஜிஏ திரை (320 x 240 பிக்சல்)
- ஆல்பாநியூமெரிக் கீபேட்
- எட்டு விளையாட்டுகள்
- தமிழ், மலையாளம் என மொத்த ஒன்பது பிராந்திய மொழிகளின் ஆதரவு
- ஃபிளாஷ் ஆதரவு கொண்ட 1.3 மெகா பிக்சல் பின்புற படக்கருவி
- 64 மெகா பைட் ரேம் கொண்ட யுனிசாக் டைகர் டி 117 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது
- 128 மெகா பைட் சேமிப்புத் திறன் / மைக்ரோ எஸ்டி ஸ்லாட் வழியாக 64 ஜிபி வரை விரிவாக்க கூடிய வசதி
- பிரத்யேக கிங் வாய்ஸ் அம்சம் உள்ளது (இது கைபேசியில் உள்ள எழுத்துக்களை தெளிவாக படித்துக் காட்டும்)
- 2000 தொடர்பு எண்கள் சேமிப்பு
- கால் ரெக்கார்டர்
- வயர்லெஸ் எஃப்.எம்
- 1900 எம்ஏஎச் பேட்டரி
- 24 நாட்கள் வரை தாங்கும் பேட்டரி திறன்
- இரட்டை 4 ஜி வோல்டிஇ, 2 ஜி, 3 ஜி, வைஃபை ஆதரவு
- வைஃபை ஹாட்ஸ்பாட்
- ப்ளூடூத் 2.0
- நிறம்: கருப்பு, வெள்ளை, நீலம்
- விலை: 2,349 ரூபாய்
இது 12 மாத கால உத்தரவாதம், 100 நாள்களுக்குள் ரீப்ளேஸ்மென்ட் வாரண்டி (மாற்று உத்தரவாதம்) ஆகியவற்றுடன் 365 நாள்களுக்குள் ஒரு முறை திரையை மாற்றிக்கொள்ளும் வசதியை நிறுவனம் வழங்கியுள்ளது.