ஹூவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் நிறுவனம், புதிய ஹானர் 10ஐ அலைபேசி மாடலை ரஷ்யாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது. ட்ரிபிள் கேமரா வசதியுடன் கூடிய ஆக்டா கோர் கிரீன் 710 சிப்செட் உடன் புதிய ஹானர் 10ஐ அலைபேசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஹானர் 10ஐ செல்போன் ஆண்ட்ராய்டு பை 9 இயங்குதளத்துடன் ஹானர் 10 சீரிஸ் அலைபேசி வரிசையில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய ஹானர் 10ஐ அலைபேசி இன் அதிகாரப்பூர்வ விற்பனை விலையை ஹானர் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. விரைவில் இந்த புதிய ஹானர் 10ஐ அலைபேசியை ஹானர் நிறுவனம் வெளியிடுமென்று அறிவித்துள்ளது.
ஹானர் 10ஐ சிறப்பம்சங்கள்:
- 6.21 முழு எச்.டி டிஸ்பிளே
- வாட்டர் டிராப் நாட்ச்
- 3டி கிரேடியன்ட் பினிஷ் டிசைன்
- ஆக்டா கோர் கிரீன் 710 சிப்செட்
- 4 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- EMUI 9.0.1 உடன் கூடிய ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம்
- 24 மெகா பிக்சல் புகைபடக் கருவி - 8 மெகா பிக்சல் புகைபடக் கருவி - 2 மெகா பிக்சல் டெலி புகைபடக் கருவி - பின்பக்க ரிபிள் புகைபடக் கருவி சேவை
- 32 மெகா பிக்சல் முன்பக்க சுயமி புகைபடக் கருவி
- 3400 எம்.ஏ.எச் மின்கலன்
ஹானர் 10ஐ செல்போன் மூன்று நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஹானர் 10ஐ அலைபேசிகள் நிலம், பிங்க் மற்றும் கருப்பு என மூன்று 3டி கிரேடியன்ட் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.