ETV Bharat / state

கந்த சஷ்டி சூரசம்ஹார விழா: திருச்செந்தூரில் போக்குவரத்து மாற்றம்..!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற உள்ள கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.

tiruchendur soorasamharam 2024
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 07ஆம் தேதி அன்று மாலை 04.00 மணிக்கு நடைபெறும் நிலையில், பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் என்பதால் திருவிழாவின் முக்கிய நாட்களான 07ஆம் தேதி மற்றும் 08ஆம் தேதி ஆகிய நாட்களில் பக்தர்களின் பாதுகாப்பு வசதியை கருத்தில் கொண்டு போக்குவரத்து மாற்றம், வாகன நிறுத்தும் இடங்கள் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்து மாற்று வழித்தடங்கள்:

  • தூத்துக்குடி, ஆறுமுகநேரி மார்க்கமாக திருச்செந்தூரை கடந்து குலசேகரன்பட்டினம், உவரி வழியாக கன்னியாகுமரி செல்லும் வாகனங்களும், அதேபோல் திருச்செந்தூரை கடந்து உடன்குடி, திசையன்விளை, சாத்தான்குளம் வழியாக நாகர்கோவில் செல்லும் வாகனங்களும் திருச்செந்தூரை கடந்து செல்லாமல் ஆறுமுகநேரி DCW ஜங்ஷன், திருநெல்வேலி ரோடு நல்லூர் ‘V’ ஜங்ஷன், ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், காயாமொழி, பரமன்குறிச்சி உடன்குடி வழியாக செல்லலாம் அல்லது சண்முகபுரம் ரயில்வே கேட், ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், காயாமொழி, பரமன்குறிச்சி, உடன்குடி வழியாக செல்லலாம்.
  • குரும்பூர் மார்க்கத்திலிருந்து திருச்செந்தூரை கடந்து குலசேகரன்பட்டினம், உவரி வழியாக கன்னியாகுமரி செல்லும் வாகனங்களும், அதே போல் திருச்செந்தூரை கடந்து உடன்குடி, திசையன்விளை, சாத்தான்குளம் வழியாக நாகர்கோவில் செல்லும் வாகனங்களும் திருநெல்வேலி ரோடு நல்லூர் ‘V’ ஜங்ஷன், ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், காயாமொழி, பரமன்குறிச்சி, உடன்குடி வழியாக செல்லலாம்.
  • கன்னியாகுமரி, உவரி, குலசேகரன்பட்டினம் வழியாக திருச்செந்தூரை கடந்து ஆறுமுகநேரி, தூத்துக்குடி அல்லது குரும்பூர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் திருச்செந்தூரை கடந்து செல்லாமல் குலசேகரன்பட்டினம், உடன்குடி, பரமன்குறிச்சி, காயாமொழி, காந்திபுரம், ராணிமஹாராஜபுரம், திருநெல்வேலி ரோடு நல்லூர் ‘V’ ஜங்ஷன் வழியாக செல்லலாம் அல்லது ஆலந்தலை N.முத்தையாபுரம், செந்தூர் மினரல்ஸ் வாய்க்கால் பாலம், நடுநாலுமூலைக்கிணறு விலக்கு வழியாக காந்திபுரம், ராணிமஹாராஜபுரம் வந்து திருநெல்வேலி ரோடு நல்லூர் ‘V’ சந்திப்பு வழியாக திருநெல்வேலி, தூத்துக்குடி செல்லலாம்.
  • நாகர்கோவில், திசையன்விளை, சாத்தான்குளம் வழியாக திருச்செந்தூரை கடந்து ஆறுமுகநேரி, தூத்துக்குடி அல்லது குரும்பூர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் திருச்செந்தூரை கடந்து செல்லாமல் பரமன்குறிச்சி, காயாமொழி, ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், திருநெல்வேலி சாலை நல்லூர் ‘V’ சந்திப்பு வழியாக திருநெல்வேலி, தூத்துக்குடி செல்லலாம்.

அரசு சிறப்புப் பேருந்துகள் வந்து செல்லும் வழித்தடங்கள் மற்றும் தற்காலிக பேருந்து நிலையம்:

  • தூத்துக்குடி, ஆறுமுகநேரி வழியாக திருச்செந்தூர் வரும் அரசு சிறப்புப் பேருந்துகள் அனைத்தும் திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையத்தில் நிறுத்தி, திரும்பி செல்லும் போது அதே வழித்தடம் வழியாக செல்லலாம்.
  • திருநெல்வேலி, குரும்பூர் வழியாக திருச்செந்தூர் வரும் அரசு சிறப்புப் பேருந்துகள் அனைத்தும் திருநெல்வேலி சாலையில் உள்ள ஷபி டிரேடர்ஸ் கீழ்புறம் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தி, திரும்பி செல்லும்போது அதே வழித்தடம் வழியாக செல்லலாம்.
  • கன்னியாகுமரி, உவரி, குலசேகரன்பட்டினம் வழியாக திருச்செந்தூர் வரும் அரசு சிறப்புப் பேருந்துகள் அனைத்தும் பரமன்குறிச்சி சாலையில் உள்ள FCI குடோனுக்கு கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தி திரும்பி செல்லும்போது அதே வழித்தடத்தில் செல்லலாம்.
  • நாகர்கோவில், திசையன்விளை, சாத்தான்குளம், பரமன்குறிச்சி வழியாக திருச்செந்தூர் வரும் அரசு சிறப்புப் பேருந்துகள் அனைத்தும் பரமன்குறிச்சி சாலையில் உள்ள FCI குடோனுக்கு கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தி திரும்பி செல்லும்போது அதே வழித்தடத்தில் செல்லலாம்.

இதையும் படிங்க: "திருசெந்தூர் கோயில் விடுதி அறைகளில் டிவியை அகற்றுங்கள்" -கந்தசஷ்டி விழா ஏற்பாட்டை பார்வையிட்ட நீதிபதி உத்தரவு!

பக்தர்களின் தனியார் வாகனங்கள் வந்து செல்லும் வழித்தடம் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடம்: பக்தர்கள் தங்கள் வாகனங்களில் போக்குவரத்து நெரிசலின்றி, பாதுகாப்பாக வந்து செல்வதற்கு சில வழிப்பாதைகள் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்று வழித்தடங்கள்
போக்குவரத்து மாற்று வழித்தடங்கள் (Credits- ETV Bharat Tamil Nadu)

மேலும், பக்தர்கள் தங்கள் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு தூத்துக்குடி சாலையில் 6 வாகன நிறுத்துமிடங்களும், திருநெல்வேலி சாலையில் 7 வாகன நிறுத்துமிடங்களும், பரமன்குறிச்சி சாலையில் 3 வாகன நிறுத்துமிடங்களும் மற்றும் திருச்செந்தூர் TB சாலையில் 3 வாகன நிறுத்துமிடங்களும் (Green Pass), பகத்சிங் பேருந்து நிலையத்தின் பின்புறம் ஒரு வாகனம் நிறுத்துமிடமும் சேர்த்து மொத்தம் 20 வாகன நிறுத்துமிடங்கள் (Parking Places) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாகனங்கள் நிறுத்தும் இடம்
வாகனங்கள் நிறுத்தும் இடம் (Credits- ETV Bharat Tamil Nadu)

ஆகவே, திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோரங்களில் நிறுத்தாமலும், அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடங்களில் வரிசையாக வாகனங்களை நிறுத்த வேண்டும்.

கோவில் அருகில் செல்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள்: வாகன நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு பக்தர்கள் கோவில் அருகில் செல்வதற்கு சிறப்பு அரசு நகர பேருந்துகள், மினி பேருந்துகள், வேன்கள் மற்றும் ஆட்டோக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவை திருச்செந்தூர் மெயின் ஆர்ச், இரும்பு ஆர்ச், வடக்கு ரதவீதி வழியாக கீழ ரதவீதியிலுள்ள தேரடி அருகில் பக்தர்களை இறக்கிவிட்டு திரும்பி செல்லும் போது அமலிநகர் சந்திப்பு, தெற்கு ரதவீதி, முத்தாரம்மன் கோவில் சந்திப்பு, தெப்பக்குளம் (முருகாமடம்) வழியாக செல்லும்" என்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அறிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.