ETV Bharat / state

"நடிகை கஸ்தூரியின் பேச்சு வெறுப்பு அரசியலின் மையமாக உள்ளது" - எம்.பி மாணிக்கம் தாகூர் பேச்சு! - VIJAY POLITICAL ENTRY

நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் சீமானுக்கு இழப்பு ஏற்படுவது நேரடியாக தெரிவதால் தனது கூடாரம் காலியாகி விடும் என்கிற பயத்தில் சீமான் பேசுகிறார் என விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

நடிகை கஸ்தூரி, எம்.பி மாணிக்கம் தாகூர்
நடிகை கஸ்தூரி, எம்.பி மாணிக்கம் தாகூர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 5, 2024, 5:59 PM IST

விருதுநகர் : நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் சீமானுக்கு இழப்பு ஏற்படுவது நேரடியாக தெரிவதால் தனது கூடாரம் காலியாகி விடும் என்கிற பயத்தில் சீமான் பேசுகிறார் என விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

சிவகாசியில், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட பல்வேறு கட்டடங்களை திறந்து வைக்க விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் வருகை தந்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழகம் அனைவரின் மொழியையும், நம்பிக்கையும் போற்றுகின்ற மண்ணாக உள்ளது.

பாஜக, ஆர்எஸ்எஸ் ஆதரவாளரான நடிகை கஸ்தூரியின் பேச்சு வெறுப்பு அரசியலின் மையமாக உள்ளது. நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் சீமானுக்கு இழப்பு ஏற்படுவது நேரடியாக தெரிவதால் தனது கூடாரம் காலியாகி விடும் என்கிற பயத்தில் சீமான் பேசுகிறார்.

இதையும் படிங்க : வீடு புகுந்து சிறுவனை தாக்கிய கொடூர கும்பல்... "ஊர்ல இருக்க பயமா இருக்கு" பதறும் மக்கள்..உறுதியான நடவடிக்கை எடுக்குமா அரசு?

வயநாட்டில் பிரியங்கா காந்தி வெற்றி பெறுவது உறுதி. பிரியங்கா காந்தி குறைந்தபட்சம் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். பிரியங்கா காந்தியின் அரசியல் வருகை நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் மோடி, அமித்ஷாவின் வெறுப்பு அரசியலுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

விஜய் கொள்கைக்கும், திமுக கொள்கைக்கும் வித்தியாசம் தெரியாமல் ஹெச்.ராஜா பேசுகிறார். தமிழர்களுக்காக பேசுபவர்கள் அனைவரும் ஒன்று என பாஜக கருதுகிறது. பாஜக தமிழர்களுக்கு எதிரான கட்சி. தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி என்பது நீண்டகால நிலையான உறவு" என்று கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.