டெல்லி: விவோ ஒய்51 (2020) கைப்பேசி இந்தியாவில் ரூ.17,990க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கைப்பேசியானது, 5,000 எம்ஏஎச் மின்கலத் திறன் (பேட்டரி), குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 SoC செயல் திறன், 48 மெகாபிக்சல் முதன்மைப் படக்கருவி, 1 டெரா பைட்வரை சேமிப்புத் திறன் விரிவாக்கும் வசதி போன்ற பிரதான அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது.
நோக்கியாவின் 2 புதிய ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்!
விவோ ஒய் 51 (2020) சிறப்பம்சங்கள்
- 6.58 அங்குல முழு அளவு எச்டி + தொடுதிரை (1080x2408 திரை அடர்த்தியுடன்)
- டியூ டிராப் நாட்ச்
- 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- ஸ்னாப்டிராகன் 665 செயல்திறன்
- 8 ஜிபி ரேம் / 128 ஜிபி அளவிலான சேமிப்புத் திறன்
- 1டிபி வரை எஸ்டி கார்டு கொண்டு சேமிப்பகத்தை விரிவாக்கும் வசதி
- பின்பக்க கேமரா: 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் (எஃப் / 1.79 லென்ஸ்) + 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் (எஃப் / 2.2 லென்ஸ்) + எஃப் / 2.4 லென்ஸ் லென்ஸ் + 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார்
- முன்பக்க கேமரா: எஃப் / 2.0 லென்ஸ் கொண்ட 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
- 18வாட் அதிவிரைவு மின்னூட்டும் திறன்
- 5000 எம்ஏஹெச் மின்கல சேமிப்புத் திறன்
- ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட ஃபன்டச் ஓஎஸ் 11
- ப்ளூ டூத் 5.0
- 4 ஜி எல்டிஇ
- இரட்டை சிம்
- இணைப்பு வசதிகள்: ஜிபிஎஸ், க்ளோனாஸ், பெய்டூ, யூ.எஸ்.பி டைப்-சி
- அளவீட்டில் 163.86 x 75.32 x 8.38 மிமீ
- எடை: 188 கிராம்
- விலை: ரூ.17,990