ETV Bharat / lifestyle

டிசம்பரில் அறிமுகமாகும் விவோ வி20 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்! - விவோ வி20 ப்ரோ ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள்:

விவோ நிறுவனத்தின் அடுத்த படைப்பான விவோ வி20 ப்ரோ ஸ்மார்ட்போன், டிசம்பர் 2ஆம் தேதி இந்தியச் சந்தையில் அறிமுகமாகிறது.

V20 Pro 5G
V20 Pro 5G
author img

By

Published : Nov 30, 2020, 2:50 PM IST

பிரபல கைப்பேசி நிறுவனமான விவோ, வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காகப் புதிய ஸ்மார்ட்போன்களை அவ்வப்போது அறிமுகப்படுத்திவருகிறது. அந்த வரிசையில், அடுத்த கண்டுபிடிப்பான விவோ வி20 ப்ரோ ஸ்மார்ட்போனை வரும் டிசம்பர் 2ஆம் தேதி இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்துகிறது.

முன்னதாக, இந்நிறுவனம் வி 20 மற்றும் வி20 SE ஸ்மார்ட்போன்களை வெளியிட்டிருந்தது. தற்போது, இந்தத் தொடரின் மூன்றாவது தொலைபேசி வி20 ப்ரோ ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் 5ஜி வசதி பொருத்தப்பட்டுள்ளது முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது.

விவோ வி20 ப்ரோ ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள்:

  • 6.44 இன்ச் புல்வியூ ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி பிராசஸர்
  • 8 ஜிபி ரேம்
  • 128 ஜிபி ஸ்டோரேஜ்
  • ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ்
  • 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா + 8 மெகாபிக்சல் (எஃப் / 2.2) அல்ட்ரா-வைட் -ஆங்கிள் லென்ஸ் + 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார் என மூன்று பின்புற கேமராக்கள் உள்ளன.
  • முன்பக்கத்தில் டூயல் செல்பீ கேமரா அமைப்பு உள்ளது. இதில் 44 மெகாபிக்சல் முதன்மை சென்சார் (எஃப் / 2.0 ஆட்டோஃபோகஸ் லென்ஸ்) மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் உள்ளன.
  • 4000mah மின்கலம் (பேட்டரி)
  • பாஸ்ட் சார்ஜிங் வசதி (விரைவு மின்னேற்றம்)
    V20 Pro 5G
    விவோ வி20 ப்ரோ ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள்

இந்த ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. 5ஜி தொழில்நுட்பத்துடன் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போனிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.