டெல்லி: டெக்னோ போவா பிளிப்கார்ட்டில் டிசம்பர் 11 முதல் மதியம் 12 மணிக்கு கிடைக்கும் என்று நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
டிரான்ஸ்ஷன் ஹோல்டிங் எனுன் சீன நிறுவனமான டெக்னோ மொபைல், போவா ரக கைப்பேசியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது மேஜிக் நீலம், ஸ்பீட் ஊதா, டாஸ்ல் கறுப்பு வண்ணங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெக்னோ போவா சிறப்பம்சங்கள்:
- டெக்னோ போவாவில் 6.8 அங்குல எச்டி+ டாட்-இன் தொடுதிரை
- 720 × 1640 பிக்சல்கள் திரை தெளிவுத்திறன்
- 20.5:9 திரை விகிதம்
- மீடியாடெக் ஹீலியோ ஜி80 செயல்திறன்
- மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 256 ஜிபி வரை சேமிப்புத் திறன் விரிவாக்கம்
- முன்பக்கம் 13எம்பி முதன்மை படக்கருவியுடன் + 2 எம்பி ஆழ சென்சார் + 2 எம்பி மேக்ரோ லென்ஸ் + குவாட் ஃபிளாஷ் முன்பக்கத்தில், இரட்டை ஃபிளாஷ் கொண்ட 8எம்பி சென்சார்
- படக்கருவியில் செயற்கை நுண்ணறிவு அழகுப்படுத்துதல், சூப்பர் இரவு பயன்முறை, உருவப்படம் முறை ஆகிய அம்சங்கள் அடங்கும்
- ஆண்ட்ராய்டு 10ஐ அடிப்படையாகக் கொண்ட HiOS 7
- 6000mAh மின்கல சேமிப்புத் திறன் உடன் 18வாட் அதிவிரைவு மின்னுக்கும் வசதி
- இரட்டை 4G VoLTE
- வை-பை (Wi-Fi) 802.11 ac (2.4GHz + 5GHz)
- புளூடூத் 5
- ஜிபிஎஸ் (GPS) / GLONASS / Beidou
- மைக்ரோ யூ.எஸ்.பி
- அளவீடுகளில் 171.23 x 77.57 x 9.4 மிமீ ஆக உள்ளது.