பிரபல கைப்பேசி நிறுவனமான மோட்டோரோலா வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக புதிய ஸ்மார்ட்போன்களை அவ்வப்போது சந்தையில் அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த வரிசையில், அடுத்த கண்டுப்பிடிப்பான 'மோட்டோ ஜி9 பவர்' ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை விலையாக 11 ஆயிரத்து 999 ரூபாய் நிர்ணயம் செய்துள்ளனர். இதன் விற்பனை டிசம்பர் 15 ஆம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் தொடங்குகிறது.
மோட்டோ ஜி9 பவர் சிறப்பு அம்சங்கள்:
- 6.8 இன்ச் எப்ஹெச்டி பிளஸ்
- ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 SoC பிராசஸர்
- 4ஜிபி ரேம்
- 64ஜிபி ஸ்டோரேஜ்
- 64 எம்பி,2 எம்பி, 2 எம்பி என மூன்று பின்புற கேமராக்கள்
- 16எம்பி செல்பி கேமரா
- புளூடூத் V 5.0
- 6000mah பேட்டரி
- பாஸ்ட் சார்ஜிங் வசதி
- பிங்கர் பிரிண்ட சப்போட் மற்றும் ஃபேஸ் அன்லாக்
இரண்டு நிறங்களில் வெளியாகவுள்ள இந்த ஸ்மார்ட்போனிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவெற்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.