ஜியோனி நிறுவனத்தின் அடுத்த கண்டுபிடிப்பான ஜியோனி மேக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியச் சந்தையில் அறிமுகமாகியுள்ளது. இதன் விற்பனை விலையாக ரூ.6999 என நிர்ணயம் செய்துள்ளனர். இந்த ஸ்மார்ட்போன் வரும் மார்ச் 8ஆம் தேதிமுதல் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது.
ஜியோனி மேக்ஸ் ப்ரோ சிறப்பு அம்சங்கள்
- 6.52 இன்ச் அளவிலான ஹெச்டி + ஐபுல்-வியூ டிஸ்ப்ளே
- ஸ்ப்ரெட்ரம் 9863A ஆக்டா கோர் 1.6GHz ப்ராசஸர்
- ஆண்ட்ராய்டு 10
- 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- 13 எம்.பி. முதன்மை சென்சார், 2 எம்.பி. பொக்கே சென்சார் என இரண்டு கேமராக்கள்
- 8 எம்.பி. செல்பி கேமரா
- 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- ரிவர்ஸ் சார்ஜிங் வசதி
ரெட், ராயல் ப்ளூ, பிளாக் கலர் என மூன்று நிறங்களில் வெளியாகும் ஜியோனி மேக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: '5ஜி ஆஃப் செய்யுங்கள்' - பேட்டரி ஆயுளை அதிகரிக்க வெரிசோன் அறிவுரை!