நாமெல்லாம் குழந்தையாக இருக்கும்போது பக்கத்து வீட்டு குழந்தைகளுடன் நொண்டி, கண்ணாமூச்சி, ஐஸ் பாய் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாண்டு பொழுதைக் கழித்தோம். ஆனால், இப்போதுள்ள குழந்தைகளுக்கு ஒரே பொழுதுபோக்கு வீடியோ கேம்ஸ் தான். பெரிய பெரிய அபார்ட்மெண்ட் வாழ்க்கையில் அவரவர் வீட்டிற்குள்ளேயே கட்டிப்போட்டது வீடியோ கேம்ஸ் என்று சொன்னால் அது மிகையாகாது.
இந்நிலையில், வரும் 2024ஆம் ஆண்டுக்குள் வீடியோ கேமிற்கான சந்தை இன்னும் அசுர வளர்ச்சியடையும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில், வரும் 2019-24ஆம் ஆண்டுக்குள் வீடியோ கேம்ஸ்ஸிற்கான ஒரு ஆண்டு வளர்ச்சி விகிதம் 10 சதவிகிதம் அதிகரிக்கும் என நிபுணர்கள் புள்ளி விவரம் தெரிவித்துள்ளனர்.
மேலும், புனை மெய்ம்மை (augumented reality), மெய்நிகர் உண்மை (virtual reality), உயர்வரையறு (high definition) போன்றவையே வீடியோ கேம்ஸ் சந்தை வளர்ச்சியடைய காரணம் என்கின்றனர்.