கேமிங் பிரியர்களுக்கு பல ஆண்டுகளாக பிளே ஸ்டேஷன் கேமிங் கன்சோல் மட்டுமே ஒரே வாய்ப்பாக இருந்தது. அப்போதுதான் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது எக்ஸ்பாக்ஸ் கேமிங் கன்சோலை வெளியிட்டது. தற்போது, எக்ஸ்பாக்ஸ் 360, எக்ஸ்பாக்ஸ் 1, எக்ஸ்பாக்ஸ் 1 எஸ், எக்ஸ்பாக்ஸ் 1 எக்ஸ் என அதன் சீரிஸ் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இருப்பினும், தற்போது வரை விண்டோஸ் பிசியில் கனெக்ட் செய்யப்பட்டு வந்த எக்ஸ்பாக்ஸ் கன்சோலில் கேம் விளையாட முடியாமல் இருந்து வந்தது. இது பயனாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது.
இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் பயனாளர்களின் கோரிக்கையை ஏற்று விண்டோஸ் பிசியில் கனெக்ட் செய்யப்படும் எக்ஸ்பாக்ஸ் கன்சோலில் கேம் ஸ்டிரீமிங் செயலியை வழங்கியுள்ளது. இந்த செயலி மூலமாக பயனாளர்கள் எக்ஸ் கிளவுட் சர்விஸ் மூலம் கேம்ஸ் விளையாட முடியும். இச்சேவையை அடுத்ததாக ஐஓஎஸ் தளத்திலும் கொண்டு வர சோதனை ஓட்டத்தைத் தொடங்கியுள்ளது.
மேலும், விண்டோஸ் பிசிக்களில் டிஸ்பிளே அனுபவத்தை மேம்படுத்த 720p க்கு பதிலாக xCloudக்காக 1080p ஸ்ட்ரீம்களை மைக்ரோசாஃப்ட் தயார் செய்து வருகிறது.
இதையும் படிங்க: 5ஜி சேவைக்காக குவால்காம் நிறுவனத்துடன் கைகோர்க்கும் ஏர்டெல்!