ETV Bharat / lifestyle

எச்சில் ஊறும் சாட் மசாலாவை வீட்டில் செய்து அசத்துங்க..10 நிமிடம் போதும்! - CHAT MASALA RECIPE IN TAMIL

சிறியவர்கள் முதல் பெரியவர்களின் ஃபேவரைட்டாக இருக்கும் சாட் மசாலாவை வீட்டில் சுலபமாக எப்படி செய்யலாம் என்பதை இந்த தொகுப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETVBharat)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : Nov 26, 2024, 11:28 AM IST

மிளகாய் தூள், மல்லித்தூள் வரிசையில் சாட் மசாலாவும் அனைவரின் சமையலறையில் இன்றியமையாத ஒரு பொடியாக மாறிவிட்டது. சாலட் தொடங்கி பொரியல் வரை ஒரு ஸ்பூன் சாட் மசாலாவை, அதன் மீது தூவி சாப்பிட்டால் அதன் சுவையே தனி தான். கடையில், சமோசா, பஜ்ஜி என எது சாப்பிட்டாலும், 'கொஞ்சம் சாட் மசாலா போட்டு தாங்க' என சொல்கிற அளவிற்கு அனைவரின் ஃபேவரைட்டாக மாறியுள்ளது. இப்படியான, சாட் மசாலாவை இனி கடையில் வாங்காமல் வீட்டிலேயே தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள். வீட்டிலேயே சாட் மசாலா எப்படி அரைக்கலாம் என்பதை பார்க்கலாம் வாங்க..

தேவையான பொருட்கள்:

  • சீரகம் - 1/4 கப்
  • மிளகு - 1/2 டேபிள் ஸ்பூன்
  • புதினா - 5 முதல் 7 இலைகள்
  • மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
  • அம்சூர் பவுடர் (மாங்காய் தூள்) - 1 முதல் 2 டேபிள் ஸ்பூன்
  • பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
  • சுக்குப்பொடி - 1/2 டீஸ்பூன்
  • கல் உப்பு - 1 டீஸ்பூன்
  • கருப்பு உப்பு - 1 டீஸ்பூன்

சாட் மசாலா செய்முறை:

  • அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சூடானதும், சீரகம் சேர்த்து மனம் வரும் வரை வறுத்து ஒரு தட்டில் மாற்றி வைக்கவும்.
  • பின்னர், மிளகு, புதினா இலை என ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து தட்டிற்கு மாற்றவும்.
  • இப்போது அடுப்பை அணைத்து, வாணலியில் இருக்கும் சூட்டில் கல் உப்பு, கருப்பு உப்பு, சுக்குப்பொடி, பெருங்காயம், மாங்காய் தூள், மிளகாய் தூள் சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
  • இப்போது, அனைத்து பொருட்களும் நன்றாக ஆறியதும், காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்தால் சாட் மசாலா தயார்.
  • இனி, வீட்டில் பஜ்ஜி, பக்கோடா, சிப்ஸ் என எந்த வகையான ஸ்நாக்ஸ் செய்தாலும் சாட் மசாலா தூவி சாப்பிட்டு மகிழுங்கள்.

இதையும் படிங்க:

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.