டெல்லி: பண்டிகை நாள்களில் இலவச காணொலி அழைப்புகளை மேற்கொள்ள முடியாது என ஜூம் நிறுவனம் அறிவித்துள்ளது.
முன்னதாக வெளிநாடுகளில் சிறப்பாகக் கொண்டாடப்படும் ‘நன்றி தெரிவிக்கும் நாளிலும்’ (Thanks Giving Day) இலவச சேவையை ஜூம் நிறுவனம் நிறுத்திவைத்தது. தற்போது கிறிஸ்துமஸ், ஆங்கில ஆண்டு பிறப்பு போன்ற உலகளாவிய பண்டிகைகள் வரும் சூழலில், மீண்டும் ஜூம் நிறுவனம் அதே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது, இலவச பயனர்கள் தங்களுக்கு நாளொன்றுக்கு கட்டணமில்லா 40 நிமிடம் என்று கொடுக்கப்பட்ட வரம்பை இந்த பண்டிகை நாள்களில் பயன்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளது. இது பயனர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
கரோனா காலகட்டத்தில் வீட்டிலிருந்து பணிபுரிபவர்களுக்கு ஜூம் காணொலி நிகழ்வு தளம் பெரும் சலுகைகளை வழங்கி, சிறிது காலத்திலேயே உலகளவில் மிகப்பெரும் பயனர்கள் பட்டாளத்தை தன் வசமாக்கிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.