உலகளவில் பிரபலமான யூ-ட்யூபில் பல்லாயிரக்கணக்கான காணொலிகள் தினந்தோறும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இந்த யூ-ட்யூப் காணொலிகளுக்கு நடுவில் வரும் விளம்பரங்கள் மூலமாகத்தான் அதிகப்படியான வருவாய் கிடைக்கிறது. 2020 மூன்றாம் காலாண்டில் யூ-ட்யூப் நிறுவனத்திற்கு சுமார் 5 பில்லியன் டாலர் விளம்பர வருவாய் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், விளம்பரத்தில் புதிய மார்க்கெட்டிங் அம்சத்தை கொண்டுவர யூ-ட்யூப் முடிவுசெய்துள்ளது. பெரும்பாலானோர் மியூசிக் நன்றாக உள்ளது என்ற காரணத்தினால் மட்டுமே விளம்பரங்கள் பார்ப்பது உறுதியானதால், ஆடியோ விளம்பரங்களை வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்த விளம்பரங்கள் வரும் சமயத்தில் டிஸ்பிளேயில் ஒற்றை படம் அல்லது கிராபிக் அனிமேஷன் வரும் எனத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பேசிய யூ-ட்யூப் விளம்பரங்களின் குழு தயாரிப்பு மேலாளர் மெலிசா ஹ்சீ நிகோலி கூறுகையில், "மியூசிக் வீடியோ ஸ்ட்ரீமிங் யூ-ட்யூபில் எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு நாளில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் 10 நிமிடங்களுக்கு மேல் இசை உள்ளடக்கத்தை பயன்படுத்துகின்றனர்.
உங்கள் பிராண்டுக்கான புதிய தீர்வுகளை நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம். இசை வாயிலாக இனி விளம்பரத்தை அறிந்துகொள்ளலாம்" எனத் தெரிவித்தார்