ஒருவர் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் வாட்ஸ்-அப் செயலி மூலம் அவரை எளிதில் தொடர்பு கொள்ளலாம். இதனாலேயே, உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் சாட்டிங் செயலியாக வாட்ஸ்-அப் உள்ளது.
தற்போது ஒரு வாட்ஸ்-அப் கணக்கை நான்கு வெவ்வேறு சாதனங்களில் (PC, Laptop, etc.,) பயன்படுத்திக்கொள்ளலாம். அப்பிடியிருக்க, வாட்ஸ்-அப் செயலி ஒரு புதிய பீட்டா வகை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
இணைய வசதியே வேண்டாம்
இதுவரை, உங்கள் ஸ்மார்ட் போனில் இணைய வசதி இருந்தால்தான் பிற சாதனங்களில் வாட்ஸ்-அப் செயலியை பயன்படுத்தமுடியும்.
ஆனால், இந்த வாட்ஸ்-அப் மல்டி டிவைஸ் பீட்டா (Whatsapp multi-device beta) செயிலியில் உங்கள் ஸ்மார்ட் ஃபோனின் இணைய வசதி துண்டிக்கப்பட்டிருந்தாலும் அல்லது ஃபோன் ஸ்விட்ச்-ஆஃப் செய்யப்பட்டிருந்தாலும் பிற சாதனங்களில் இருந்து உங்களால் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட முடியும்.
இந்த வாட்ஸ்-அப் பீட்டா Android, iOS ஆகிய வெர்ஷன்கள் தற்போது கிடைக்கப்பெறுகின்றன.
இந்த பீட்டா வெர்ஷனை பயன்படுத்த:
1. வாட்ஸ்-அப் செயிலின் முகப்பு பக்கத்தில் உள்ள மூன்று புள்ளிகள் மெனுவிற்கு சென்று, பிற சாதனங்கள் உடன் இணைக்கும் மெனுவை தேர்ந்தெடுக்க வேண்டும் (Three dot menu < Linked device)
2. அதன்பின், வரும் 'MULTI-DEVICE BETA' ஆஃப்ஷனை அழுத்தவேண்டும். அதன்பின்னர் நெறிமுறைகளை படித்துவிட்டு 'JOIN BETA' டேப்-ஐ அழுத்தினால் புது பீட்டா வெர்ஷனை தொடங்கிவிடலாம்.
3. பின்னர், வழக்கம்போல் உங்கள் மடிக்கணினி அல்லது கணினியில் 'WHATSAPP WEB' மூலம் வாட்ஸ்-அப் கணக்கை அதில் இணைத்துக்கொள்ளலாம்.
இந்த வழிமுறைகள் மூலம் நீங்கள் ஒருமுறை பீட்டாவில் இணைந்துவிட்டால், இணையம் இல்லாமலும் தங்கள் மடிக்கணினி அல்லது கணினியில் இருந்து வாட்ஸ்-அப் மூலம் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபடலாம்.
மேலும், நீங்கள் இணையம் இல்லாமல் பயன்படுத்தினாலும் உங்கள் பழைய செய்திகள், புகைப்படங்கள் அனைத்தும் பிற சாதனங்களில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பீட்டா வெர்ஷனில் நீங்கள் பிறருடன் உரையாடினாலும், எப்போதும் போல் End-to-End encryption முறையில் தான் செய்தி அனுப்பப்படும் என வாட்ஸ்-அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.