சான் பிரான்சிஸ்கோ: பயனர்கள் அனுப்பு செய்திகளின் உண்மை தன்மையை அறிந்துகொள்ள புதிய அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது இந்த அம்சம் பிரேசில், இத்தாலி, அயர்லாந்து, மெக்சிகோ, ஸ்பெயின், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாட்டில் உள்ள பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது.
மிளிர்ந்தெழும் இந்திய கைபேசி நிறுவனம்: அதிரடி விலையில் லாவா Z66 களமாட வருகிறது
உலகம் முழுவதும் பல கோடி பயனர்களை கொண்டுள்ள வாட்ஸ்அப் செயலி மூலம் கோடி கணக்கான தகவல்கள் பகிரப்பட்டுவருகின்றன. இச்சூழலில் அப்படி பகிரப்படும் தகவல்களின் உண்மைத் தன்மையை உறுதிசெய்ய இதன் தாய் நிறுவனமான ஃபேஸ்புக் முனைப்புக்காட்டி வருகிறது.
குறிப்பாக உண்மைத்தன்மை அறியாமல் அனுப்பப்படும் சில தகவல்களால் பல சிக்கல்கள் எழுகின்றன. போலி முன்னோக்கி செய்திகளைத் தடுக்க வாட்ஸ்அப் நிறுவனம் பல முயற்சிகளை கையாண்டு வருகிறது. அதன் விளைவாக முன்னோக்கி செய்திகளை ஐந்து நபர்களுக்கு மட்டுமே அனுப்ப முடியும் என அறிவித்தது.
முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனை கடும் சரிவு!
தற்போது போலி செய்திகள் வேகமாக பரவுவதை தடுக்கும் விதமாகவும், அதன் உண்மைத் தன்மையை அறியும் விதமாகவும் புதிய பதிப்பை வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டுவந்துள்ளது. சர்ச் தி வெப் (search the web) என்ற அம்சமானது நேரடியாக கூகுளுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதன்மூலம் சம்பந்தப்பட்ட செய்தியின் உண்மைத் தன்மை என்ன என்பதை கூகுளில் இருந்து உடனடியாக பெறலாம்.