கரோனா நோய்க் கிருமியின் தாக்கம் உலகளவில் இன்னும் ஓயாமல் பரவிக் கொண்டே இருக்கிறது. இச்சூழலில், இதேபோன்ற அதிபயங்கரமான ஹாக்கர்ஸ் கரோனா பெயரில் சில செயலிகளை உருவாக்கி, பயனர்களின் முக்கிய தரவுகளை திருடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனவே, இதுபோன்ற செயலிகளை சொடுக்குவதற்கு முன், பயனர்கள் அதுகுறித்த ஆபத்துகளை அறிந்து கொள்ளவேண்டும் என மத்திய அமைச்சம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உஷார்...அரசு பயன்பாட்டிற்கு ஸூம் ஆப் பாதுகாப்பற்றது - உள்துறை அமைச்சகம்
இதுபோன்ற செயலிகள், வங்கிக் கணக்கு எண், கடவுச்சொல் முதற்கொண்டு, அனைத்தையும் திருடும் அபாய சூழல் இருப்பதாகக் கூறப்படுகிறது. முன்னதாக சூம் (ZOOM) செயலி ஆபத்தானது; அதனை யாரும் பயன்படுத்தவேண்டாம் என மத்திய அரசு எச்சரித்திருந்தது.